games

img

உலகக்கோப்பையில் இளம் வீரர்களை நட்சத்திர வீரர்களாக மாற்றிய ஐரோப்பிய கிளப் அணிகள்

கத்தார் சீசனில் உலகக்கோப்பையில் அனைத்து அணி வீரர்களும் மிக அருமையாக விளையாடினார்கள். குறிப்பாக இளம் வீரர்கள் நட்சத்திர  வீரர்களாக ஒரு படி மேலே சென்று மிரட்டினர். இதற்கு எல்லாம் காரணம் தேசிய  அணியின் பயிற்சி என்ற அடிப்படை ஒரு பக்கம் இருந்தாலும், வருடம் முழுவதும்  பயிற்சி, ஆட்டத்திறன், நுணுக்கம், பொறுப்பு என அனைத்தையும் வழங்கி இளம்  வீரர்களை வளர்த்தெடுப்பது கால்பந்தின் இதயம் என கருதப்படும் “ஐரோப்பிய கிளப்” அணிகளின் திட்டங்களால்தான் 22-வது சீசன் உலகக்கோப்பை தொடரில் பெரும்பாலான நாட்டின் இளம் வீரர்களை புதிய நட்சத்திரங்களாக முளைத்துள்ளனர்.

 கிளப் அனுபவம் மூலம் அசத்திய இளம் வீரர்களின் பட்டியல்

1.    ஆல்வரெஜ் (அர்ஜெண்டினா)-    
மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து)
2.  அல்லிஸ்டர் (அர்ஜெண்டினா)-பிரிட்ஜ்டன் (இங்கிலாந்து)
3.  என்ஜோ பெர்னாண்டஸ் (அர்ஜெண்டினா) -    
பென்பிகா (போர்ச்சுக்கல்)
4.  மாப்பே (பிரான்ஸ்) - பிஎஸ்ஜி (பிரான்ஸ்)
5.  டிசோமேனி (பிரான்ஸ்) - ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்)
6.   ஹெர்னாண்டஸ் (பிரான்ஸ்) - பேயர்ன் மூனிச் (ஜெர்மனி)
7.   ஹக்கீமி (மொரோக்கோ) - பிஎஸ்ஜி (பிரான்ஸ்)
8.   சாகா (இங்கிலாந்து) - அர்சனெல் (இங்கிலாந்து)
9.   டேவிஸ் (கனடா) - பேயர்ன் மூனிச் (ஜெர்மனி)
10.  கோன்டே (பிரான்ஸ்) - லிவர்பூல் (இங்கிலாந்து)
11.   சன் மின் (தென் கொரியா) - டோட்டன்ஹம் (பிரான்ஸ்)