games

img

லீக் ஆட்டங்களிலேயே நாக் அவுட் பிரச்சனை-1 கரையேறுமா ஜெர்மனி

 குரூப் “இ” பிரிவு (புள்ளிப்பட்டியல்)

   நாடு               ஆட்டம்     வெற்றி       டிரா          தோல்வி         புள்ளிகள்
ஸ்பெயின்               2               1                 1                    0                          4
ஜப்பான்                  2                1                0                    1                           3
கோஸ்டாரிகா        2                1                0                    1                           3
ஜெர்மனி                 2                0               1                     1                           1        

லீக் சுற்றின் கடைசி ஆட்ட வெற்றி கணிப்பு

ஜெர்மனி- கோஸ்டாரிகா : பலம், பார்ம் அடிப்படையில் - ஜெர்மனி வெல்லலாம் ஸ்பெயின்-ஜப்பான்: பலம், பார்ம்  அடிப்படையில் - ஸ்பெயின் வெல்லலாம் ஸ்பெயின் : வெற்றி பெற்றால் நேராக நாக் அவுட். தோல்வி மற்றும் டிரா நிகழ்ந்தால் மற்ற அணிகளின் வெற்றி தோல்வி, கோல் கணக்குகளை எண்ண வேண்டிய நிலை ஏற்படும்.  ஜப்பான், கோஸ்டாரிகா : வெற்றிபெற்றால் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். டிரா, தோல்வி கண்டால் கோல் அடிப்படையில் சிக்கல் உருவாகும்.

கடந்த உலகக்கோப்பை போல் அல்லாமல் நடப்பு சீசனில் ஒவ்வொரு ஆட்டமும் அனல் பறக்கிறது. சீனியர் அணிகளின் அனுபவ ஆட்டம், இளம் அணிகளின் பயமரியா ஆட்டங்களால் லீக் சுற்றே காலிறுதி போல கலக்கலாக உள்ளது. இளம் அணிகளின் அதிரடி ஆட்டங்களால் சில சீனியர் அணிகள் படுதோல்வியை சந்தித்து  வரும் நிலையில், பல சீனியர் அணி கள் திக்கு திணறி வெற்றி பெற்றது. சில  அணிகள் டிரா செய்தாலே போதும் என தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தி டிரா செய்தது. இளம்  அணிகளால் அதிகம் பாதிக்கப்பட்டது 4 முறை சாம்பியனான ஜெர்மனி, 2 முறை சாம்பியனான உருகுவே, கடந்த சீசனில் மூன்றாம் இடத்தை பிடித்த பலம் வாய்ந்த அணியான பெல்ஜியம் ஆகிய அணிகள்தான்.  குரூப் “இ” பிரிவில் டிசம்பர்  2-ஆம் தேதியன்று கடைசி லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. நள்ளிரவு 12:30 மணிக்கு (அதிகாலை) ஒரே நேரத்தில் ஸ்பெயின் - ஜப்பான் அணிகளும், ஜெர்மனி - கோஸ்டாரிகா அணிகளும் மோதுகின்றன. இந்த 2 ஆட்டங்களும் ஜெர்மனி அணிக்கு முக்கியமான தாகும். கோஸ்டாரிகாவை ஜெர்மனி அதிக கோல் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். அதே போல ஸ்பெயின் அணி ஜப்பான்  அணியை வீழ்த்த வேண்டும். இவ்வாறு நடந்தால் 4 புள்ளிகளுடன் ஜெர்மனி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். இரண்டு ஆட்டங்களும் டிராவில் முடிவடைந்தாலும், ஸ்பெயின் - ஜப்பான் ஆட்டம் டிரா வில் முடிவடைந்தாலும், ஜெர்மனி அணியின் நாக் அவுட் கனவு அவுட் ஆகும்.
 


 

;