games

img

முன்னாள் கால்பந்து வீரர் துளசிதாஸ் பலராம் மரணம்!

இந்திய முன்னாள் கால்பந்து வீரர் துளசிதாஸ் பலராம் (87) உடல்நலக் குறைவால் காலமானார்.
இந்தியாவின் முன்னாள் கால்பந்து வீரர் துளசிதாஸ் பலராம் கடந்த 1956 மற்றும் 1960 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இவர், கடந்த 1962-ஆம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். அதே ஆண்டில் அவருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
இவர் டிசம்பர் 26 முதல் உடல்நலக் குறைவு காரணமாக கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிறுநீரக செயலிழப்பு காரணமாக இன்று மதியம் 2 மணி அளவில் அவர் உயிரிழந்தார்.