games

img

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா 2022

விளையாட்டு உலகில் முதன்மையான திருவிழாவான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 22-வது சீசன் அரபு நாடான கத்தாரில் நடைபெற்று வருகிறது.

நவம்பர் 20 முதல் 
டிசம்பர் 18 வரை

இன்றைய ஆட்டங்கள்

குரூப் “ஜி”

கேமரூன் - செர்பியா

நேரம் : மதியம் 3:30 மணிக்கு, இடம் : அல் ஜனுவப்

இரு அணிகளுக்கும் இது 2-வது ஆட்டமாகும். செர்பியா தனது முதல் ஆட்டத்தில் பிரேசில் அணியிடம் வீழ்ந்தது. கேமரூன் அணி தனது முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணியிடம் வீழ்ந்தது.
 

குரூப் “எச்”

தென் கொரியா - கானா

நேரம்: மாலை 6:30 மணிக்கு. இடம்: எஜுகேஷன் சிட்டி

இரு அணிகளுக்கும் இது 2-வது ஆட்டமாகும். தென் கொரியா தனது முதல் ஆட்டத்தில் பலமான உருகுவே அணியை டிரா செய்தது. கானா தனது முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல் அணியிடம் வீழ்ந்தது.

குரூப் “ஜி”

பிரேசில் - சுவிட்சர்லாந்து

நேரம் : இரவு 9:30 மணிக்கு, இடம்: 974

இரு அணிகளுக்கும் இது 2-வது ஆட்டமாகும். பிரேசில் தனது முதல் ஆட்டத்தில் செர்பியாவை வீழ்த்தியது.  சுவிட்சர்லாந்து தனது முதல் ஆட்டத்தில் கேமரூன் அணியை வீழ்த்தியது.

குரூப் எச்”

போர்ச்சுக்கல்  - உருகுவே

நேரம் : நள்ளிரவு 12:30 மணி (செவ்வாயன்று அதிகாலை), இடம் : லுஸைல்
 

இரு அணிகளுக்கும் இது 2-வது ஆட்டமாகும். போர்ச்சுக்கல் அணி தனது முதல் ஆட்டத்தில் கானாவை வீழ்த்தியது. உருகுவே தனது முதல் ஆட்டத்தில் தென் கொரியா அணியை டிரா செய்தது.

சேனல் : ஸ்போர்ட்ஸ் 18, ஜியோ சினிமா (ஓடிடி) இலவசமாக காணலாம்.

ஆசிரியர் போல  அசத்திய நடுவர்

அர்ஜெண்டினா - மெக்ஸிகோ ஆட்டத்தில் கள நடுவராக பணியாற்றியவர் இத்தாலியைச் சேர்ந்த டேனியல் ஓர்சாடோ (47) மிகவும் பொறு மையாக செயல்பட்டு அசத்தினார். கோலடிப் பதை விட்டுவிட்டு மோதல் போக்கில் இரு அணி களும் கவனம் செலுத்தியதால் மோதல், விதி மீறல், காய தாக்குதல் என பல்வேறு சம்பவங்கள் அரங்கேறின. இதையெல்லாம் பொறுத்துக்  கொண்டு பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு அறிவுரை கூறுவது போல எச்சரிக்கை உத்தரவு களுடன் வீரர்களை மன்னித்து விட்டார். இந்த  ஆட்டத்தில் வேறொரு நடுவர் களமிறங்கியி ருந்தால் மிக அதிகளவில் மஞ்சள், சிவப்பு அட்டை  கொடுக்கப்பட்டிருக்கும்.

யார் இந்த டேனியல் ஓர்சாடோ

கத்தார் உலகக் கோப்பையை துவங்கி  வைத்த நடுவர் என்ற பெயர் பெருமையை பெற்ற இத்தாலியின் டேனியல் ஓர்சாடோ ஐரோப்பா வின் மிகவும் அனுபவம் வாய்ந்த நடுவர்களில் ஒருவராவர். கால்பந்து உலகில் மிகவும் அனு பவம், இக்கட்டான சூழ்நிலையில் கவனமாக போட்டியை தொடர்ந்து நடத்துவது என பல்வேறு  சிறப்புகளை கொண்டவர். இவருக்கு கால்பந்து  உலகில் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. வீரர்கள், கிளப், சர்வதேச நாடுகள், பிபா என  அனைத்து இடங்களிலும் இவருக்கு தனி மரியாதை உள்ளது. இத்தகைய சிறப்பால்  உலகக்கோப்பை யில் விளையாடும் தகுதியை இழந்த இத்தாலி நாட்டிற்கு நடுவர் மூலம் சிறப்பு அங்கீகாரம் கிடைத்தது. 2016-ஆம் ஆண்டு முதல் சர்வதேச கால்பந்து விளையாட்டுகளுக்கான நடுவர் மற்றும் போட்டி அதிகாரிகளுக்கு வயது வரம்பை 45-ஆக குறைத்தது பிபா. ஆனால் டேனியலின் வயது 47ஆக இருப்பினும் அவரது பண்பு, புகழ் அடிப்படையில் சிறப்பு அந்தஸ்து கொடுத்து உல கக்கோப்பையில் களமிறக்கி அழகு பார்த்தது பிபா...