கோபா அமெரிக்கா - 2024
15 முறை சாம்பியன் பட்டம் வென்ற
உருகுவேயிற்கு அதிர்ச்சி அளித்த கொலம்பியா
48ஆவது சீசன் கோபா அமெரிக்கா தொடர் அமெரி க்காவில் நடைபெற்று வரும் நிலை யில், இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வியாழனன்று அதி காலை நடைபெற்ற இரண்டாவது அரை யிறுதி ஆட்டத்தில் உருகுவே - கொலம்பியா அணிகள் மோதின. தனது காலிறுதி ஆட்டத்தில் பலமான பிரேசில் அணியை வீழ்த்தியதால், உருகுவே அணி இந்த ஆட்டத்தில் எளிதாக வெற்றி பெறும் என எதிர் பார்க்கப்பட்டது.
ஆனால் எதிர்பார்ப்புகள் எல்லாம் முதல் பாதிக்குள் தலைகீழாக மாறியது.
ஆட்டத்தின் தொடக்க நிமிடத்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய கொலம்பியா அணி, ஆட்டத்தின் 39ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பு மூலம் அந்த அணியின் முன்கள வீரர் ஜெபர்சன் கோலடித்து அசத்தினார்.
அதன்பிறகு பலமுறை முயற்சி செய்தும் உருகுவே அணியால் பதி லுக்கு கோலடிக்க முடியவில்லை. இறு தியில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற கொலம்பியா அணி 23 ஆண்டு களுக்கு பிறகு இறுதிக்கு முன்னேறி யது. 15 முறை சாம்பியன் பட்டம் வென்ற உருகுவே அணி அதிர்ச்சி தோல்வி யுடன் தொடரில் இருந்து வெளியேறியது.
அடுத்து...
அர்ஜெண்டினா - கொலம்பியா அணிகள் மோதிய இறுதி ஆட்டம் ஜூலை 15 அன்று நடைபெறுகிறது. முன்னதாக கனடா - உருகுவே அணி கள் மோதும் 3ஆவது இடத்திற்கான ஆட்டம் ஜூலை 14 அன்று நடை பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய கால்பந்து - 2024 இறுதியில் இங்கிலாந்து
ஜெர்மனி நாட்டில் நடைபெற்று வரும் 17ஆவது சீசன் ஐரோப்பிய கால்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புத னன்று நள்ளிரவு நடை பெற்ற இரண்டாவது அரை யிறுதி ஆட்டத்தில் இங்கி லாந்து - நெதர்லாந்து அணிகள் மோதின.
தொடக்கம் முதலே இரு அணிகளும் அதிரடி ஆட்டத்தை கையிலெடுத்த நிலையில், ஆட்டத்தின் 7 ஆவது நெதர்லாந்து அணி வீரர் சேவி சைமன்ஸ் மிரட்ட லான ஷாட்டில் கோலடித்து அசத்தினார். இதன்மூலம் நெதர்லாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்த நிலையில், இந்த முன்னிலை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 18ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பு மூலம் அந்த அணியின் கேப்டன் ஹாரி கோலடித்தார். போட்டி 1-1 என்ற கணக்கில் சமனில் நகர்ந்தது.
ஆட்டத்தின் 89ஆவது நிமிடம் வரை இரு அணி களும் மேற்கொண்டு கோல் எதுவும் அடிக்காத நிலை யில், இந்த ஆட்டம் கூடுதல் நிமிடம் நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 90ஆவது நிமி டத்தில் இங்கிலாந்து வீரர் வாட்கின்ஸ், திரீல் கோல டிக்க நெதர்லாந்து வீரர்கள், ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
பதில் கோலடிக்க நெதர் லாந்து அணி கடைசி நேரத் தில் கடுமையாக போராடினா லும், அந்த அணியால் கோல டிக்க முடியவில்லை. இறு தியில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 2ஆவது முறையாக இறுதிக்கு முன்னேறியது. முன்னாள் சாம்பியனான நெதர்லாந்து அணி வெறுங்கையோடு தொடரில் இருந்து வெளி யேறியது.
அடுத்து...
ஸ்பெயின் - இங்கிலாந்து அணிகள் மோதும் இறுதி ஆட்டம் ஜூலை 14 அன்று நடைபெறுகிறது. கோபா அமெரிக்கா தொடரை போன்று ஐரோப்பிய தொட ரில் 3ஆவது இடத்திற்கான போட்டி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.