games

img

விளையாட்டு

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு கோப்பை

கால்பந்து உலகில் பிரபல தொடராக இருப்பது ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் ஆகும்.  இந்த தொடரின் 70ஆவது சீசனின் இறுதி ஆட்டம் ஞாயிறன்று அதிகாலை நடைபெற்றது. ஜெர்மனி நாட்டின் மூனிச் நகரில் நடைபெற்ற இந்த ஆட்ட த்தில் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பிரான்ஸ் கிளப்) - இன்டர்மிலன் (இத்தாலி கிளப்) அணிகள் மோதின. 3 முறை சாம்பியன்ஸ் லீக் பட்டம் வென்ற அனுபவம் இருந்தாலும் இன்டர்மிலன், பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணியின் தாக்குதல் பாணி ஆட்டத்தை சமா ளிக்க முடியாமல் கடுமையாக திணறியது. ஆட்டத்தின் 12 ஆவது நிமிடத்திலேய பிஎஸ்ஜி வீரர் அஸ்ராப் ஹக்கீமி (மொரோக்கா நாட்டின் நட்சத்திர வீரர்) கோலடித் தார். சீரான இடைவெளியில் அடுத்த டுத்து கோல்மழை பொழிந்த பிஎஸ்ஜி அணி இறுதியில் 5-0 என்ற கோல் கணக்கில் இன்டர்மிலன் அணியை புரட்டியெடுத்து முதன் முறையாக சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது. 4ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கிய இன்டர் மிலன் அணி, 4ஆவது முறையாக இரண்டாமிடம் பிடித்தது.

ரூ.241 கோடி பரிசுத்தொகை

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டத்தில் கோப்பையை கைப்பற்றிய பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணி ரூ.241 கோடி பரிசுத்தொகை அள்ளி யது. இரண்டாமிடம் பிடித்த இன்டர்மிலன் அணி  பரிசுத் தொகையாக ரூ.178 கோடியை வென்றது. அரையிறுதியில் தோல்வி கண்ட அர்சனேல் (இங்கிலாந்து கிளப்), பார்சிலோனா (ஸ்பெயின் கிளப்) அணிகள் தலா ரூ.144 கோடியை பெற்றுக்கொண்டன. இதே போல காலிறுதி, நாக் அவுட், லீக் சுற்று என அனைத்து பிரிவுகளிலும் வெளியேறிய மற்றும் பங்கேற்ற  அணிகளுக்கு போதுமான அளவில் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளன.  (குறிப்பு : அரையிறுதியில் தோல்வி கண்ட அணிகளுக்கு பரிசுத்தொகையாக வழங்கப்படும் ரூ.144 கோடி இரண்டு அணிகளுக்கு சேர்த்து  வழங்கப்படுகிறதா? இல்லை, தனித் தனியாக ரூ.144 கோடி வழங்கப்படுகிறதா? என்பது தொடர்பாக தெளிவான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது)

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் சீன வீராங்கனை சாம்பியன்

96 ஆண்டுகால பழமையான சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் சீனாவின் சென் - வாங் மோதினர். இருவரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அதிரடி ஆட்டத்தால், ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும் அனல் பறந்தது. இறுதியில் சென் 21-11, 21-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் படத்தை கைப்பற்றினார். மகளிர் இரட்டையர் பிரிவில் தென் கொரியாவின் கிம் - ஜோங் ஜோடி, 21-16, 21-14 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நகானிஷி - இவாங்கா ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அதே போல கலப்பு இரட்டையர் பிரிவில் தாய்லாந்தின் டுப்பிச்சோ - சுப்பிசரா ஜோடி கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.