யாருக்கு 3-வது இடம்
குரேஷியா - மொராக்கோ இன்று பலப்பரீட்சை
22-வது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அர்ஜெண்டினா - குரேஷியா அணிகள் மோதிய முதல் அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணியும், பிரான்ஸ் - மொராக்கோ அணிகள் மோதிய 2-வது அரையிறுதியில் பிரான்ஸ் அணியும் வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறின. இந்நிலையில், அரையிறுதியில் தோற்ற குரேஷியா - மொராக்கோ அணிகள் மோதும் 3-வது இடத்திற்கான ஆட்டம் சனிக்கிழமையன்று நடைபெறுகிறது.
யாருக்கு வெற்றி?
குரேஷியா - மொராக்கோ
வெற்றி வாய்ப்பு
குரேஷியா - மொராக்கோ
58% 42%
நேரம் : இரவு 8:30 மணி / இடம்: கலீபா / சேனல்: ஸ்போர்ட்ஸ் 18, ஜியோ சினிமா
இரு அணிகளும் சரிசம பலத்தில் இருந்தாலும், யாருக்கு வெற்றி என திடமாக கருத்து கூற முடியாது. காரணம் இரு அணிகளும் தங்களது அரையிறுதியில் ஒரே மாதிரியான தோல்வியை சந்தித்துள்ளன. முன்களத்தில், தடுப்பாட்டத்தில் பலமாக உள்ள குரேஷியா அணி பார்ம் இன்றி உள்ளது. அதே போல தடுப்பாட்டத்தில் அசூர பலத்தில் உள்ள மொராக்கோ, கிடைக்கும் வாய்ப்பில் முன்களத்தில் அசத்துகிறது. குரேஷியா அணியை போல மொராக்கோவிற்கு பெரியளவு பார்ம் பிரச்சனை இல்லை என்றாலும், அரையிறுதி தோல்வி மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிர்ச்சி தோல்விகள் குரேஷியாவிற்கு பழக்கம் என்பதால் அந்த தோல்வி பார்மில் சிக்க வாய்ப்பில்லை. ஆட்டத்திறன் மற்றும் பார்ம் பிரச்சனை பிரிவுகளை ஒப்பிடும் பொழுது குரேஷியா அதனை எளிதாக சமாளிக்கும் வாய்ப்பு உள்ளதால் குரேஷியாவிற்கு 3-ஆம் இடத்தை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கோப்பை வாய்ப்பு கிடைக்கவில்லை, உலகக்கோப்பையில் 3-வது இடம் பெற்ற முதல் ஆப்பிரிக்க நாடு என்ற பெருமையை பெற்று வரலாறுடன் விடைபெற வரிந்து கட்டுவதால் மொராக்கோவிற்கும் 3-ஆம் இடத்தை வெல்லும் வாய்ப்பு உள்ளது. ஆனால் ஆட்டத்தின் போக்கை பொறுத்தே எல்லாம் அமையும். முன் ஆருடத்திற்கு வழி இல்லை.
நாளை...
உலகக்கோப்பை கால்பந்து இறுதி ஆட்டம்
அர்ஜெண்டினா - பிரான்ஸ்
நாள் : டிசம்பர் 18-ஆம் தேதி / இரவு 8:30 மணிக்கு
இடம் : லுஸைல்
தங்கப் பந்து
1. மெஸ்ஸி (அர்ஜெண்டினா)
2. மாப்பே (பிரான்ஸ்) இருவர்கள் இருவரில் யாராவது ஒருவர் வாங்க 100 சதவீதம் வாய்ப்புள்ளது. மேலும் மோட்ரிச் (குரேஷியா), கிரிஸ்மேன் (பிரான்ஸ்), லிவாகோவிச் (குரேஷியா), ஹக்கீம் (மொராக்கோ) ஆகியோருக்கும் 70 சதவீதம் வாய்ப்பு உள்ளது.
தங்கக் காலணி யாருக்கு?
1. மெஸ்ஸி (அர்ஜெண்டினா) - 5 (பாஸ் கோல் - 3)
2. மாப்பே (பிரான்ஸ்) - 5 (பாஸ் கோல் - 2)
3. கிரௌட் (பிரான்ஸ்) - 4
4. ஆல்வரெஜ் (அர்ஜெண்டினா) - 4
கோல்கள் அடிப்படையில் சரிசமமாக இருந்தால் மற்ற வீரர்கள் கோலடிக்க பாஸ் செய்த உதவிகளின் எண்ணிக்கையை சேர்த்து தங்க காலணி விருது வழங்கப்படும்.
தங்கக் கையுறை (கோல் கீப்பர்)
1. மார்டியன்ஸ் (அர்ஜெண்டினா)
2. லோரிஸ் (பிரான்ஸ்)
3. லிவாகோவிச் (குரேஷியா)
4. யாசின் (மொராக்கோ)
இவர்களில் யாருக்காவது வாய்ப்பு வழங்கப்படும். லிவாகோவிச் (குரேஷியா), மார்டியன்ஸ் (அர்ஜெண்டினா) ஆகிய இருவர்களில் யாரேனும் ஒருவருக்கு அதிக வாய்ப்புள்ளது.
மூடநம்பிக்கை ஜீவன்களை காணவில்லை...
மூடநம்பிக்கை ஜீவன்களை காணவில்லை... உலகக்கோப்பை கால்பந்து தொடருக்காக ராணுவத்தில் பணியாற்றுவது போல வீட்டிற்கு கூட செல்லாமல் மாதக் கணக்கில் தீவிர பயிற்சி மேற்கொண்டு, குரூப் சுற்று முதல் இறுதி ஆட்டங்கள் வரை உறக்கம், உணவு, ஓய்வு என எந்த எதிர்பார்ப்பின்றி உலகக்கோப்பை தொடரில் விளையாடும் ஒவ்வொரு நாடுகளும் எதிர்கொள்ளும் இன்னல் இது. இது எல்லாம் நாட்டிற்காக என்று வீரர்கள் எதையும் கண்டுகொள்ளாமல் சந்தோசமாக இருப்பார்கள். வியர்வை ஆறு பாய்ந்து, ரத்தம் சிந்தி என பல்வேறு உடல்ரீதியான இன்னல்களையும் சமாளித்து வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தும் இந்த கால்பந்து உலகில் 2010, 2014, 2018 ஆகிய 3 உலகக்கோப்பை தொடரில் நாய், பூனை, ஆக்டோபஸ், கிளி உள்ளிட்ட பிராணிகளை வைத்து யாருக்கு உலகக்கோப்பை? என்று அரையிறுதி முதல் ஆருடம் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். ஆரம்பித்தார்கள். இந்த மூடநம்பிக்கையால் வீரர்களின் திறமையை இழிவுபடுத்தும் விதமாக அமைந்தது. புரியும்படி சொன்னால் மூடநம்பிக்கை தான் அந்த 3 தொடர்களில் ஆதிக்கம் செலுத்தியது. வீரர்களை ஒரு பொம்மையை போன்று பார்த்தார்கள் விளையாட்டின் அருமை புரியாத நபர்கள். ஆனால் நடப்பு சீசனில் அரையிறுதி நிறைவு பெற்ற தருவாயில் இதுவரை இந்த மூடநம்பிக்கை “ஆருட பிராணிகளையும்”, அதை வைத்து ஆதாயம் தேடும் மூடநம்பிக்கை ஜீவன்களையும் காணவில்லை.