games

img

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா 2022

விளையாட்டு உலகில் முதன்மையான திருவிழாவான உலகக்கோப்பை கால்பந்து தொடரின்  22-வது சீசன் அரபு நாடான கத்தாரில் நடைபெற்று வருகிறது.

பிரேசிலுக்கு அதிர்ச்சி அளித்த கேமரூன்

கத்தார் உலகக்கோப்பையை வெல்லும் என கணிக்கப்படும் அணி களில் ஒன்றான பிரேசில் அணி (குரூப் “ஜி”) தனது கடைசி லீக்  ஆட்டத்தில் இளம் ஆப்பிரிக்க அணியான கேமரூனை எதிர்கொண்  டது. ஏற்கெனவே நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், கேம ரூன் அணிக்கெதிரான ஆட்டத்தில் பிரேசில் அணி 2-ஆம் தர (சில வீரர்களுக்கு ஓய்வு) அணியாக களமிறங்கியது. ஆட்டத்தின் கடைசி நிமிடம் வரை  (90-வது) இரு அணிகளும் கோலடிக்கவில்லை. கூடுதலாக வழங்கப்  பட்ட உதிரி நேரத்தின் 2-வது நிமிடத்தில் கேமரூன் வீரர் வின்சென்ட்  கோலடிக்க பிரேசில் அணி அதிர்ச்சியில் உறைந்தது. பதி லுக்கு கோலடிக்க பிரேசில் இறுதிக்கட்ட போராட்டம் நடத்தியது. எனினும் கேமரூன் அணி தடுப்பாட்டத்தில் சுவர் அமைக்க, இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் 5 முறை சாம்பியன் அணியான பிரேசிலை வீழ்த்தி வர லாற்று வெற்றியுடன் லீக் சுற்றோடு வெளியேறியது கேமரூன்.

இன்றைய ஆட்டங்கள்

(நாக் அவுட்) 
பிரான்ஸ் - போலந்து
நேரம் : இரவு 8:30 மணி
இடம் : அல் துமாமா

இங்கிலாந்து - செனகல்
நேரம் : நள்ளிரவு 12:30 மணி (திங்களன்று அதிகாலை)
இடம் : அல் பாயித்
 

கொண்டாட்டத்திற்கு ரெட் கார்டு...

பிரேசில் அணிக்கெதிரான ஆட்டத்தில் வரலாற்று வெற்றிக்கான கோலை அடித்த கேமரூனின் கேப்டன் வின்சன்ட் (90+2), விதிகளை மீறி ஜெர்சியை கழற்றி வெற்றியை கொண்டாடியதால் (90+3 வது நிமிடத்தில்) ரெட் கார்டு (சிவப்பு அட்டை) பெற்றார். அதாவது அதிரடி கோலுக்கான சந்தோசம் ஒரு நிமிடம் கூட நீடிக்கவில்லை. ரெட் கார்டு வழங்கப்பட்டாலும் நடுவரின் முடிவை புன்னகை மற்றும் மரியாதையுடன் ஏற்று களத்திலிருந்து விடை பெற்றார்.

இவர்கள்தான் ரசிகர்கள்...

தனது நாட்டிற்கு நாக் அவுட் சுற்றுக்கு வாய்ப்பு இல்லை என்று தெரிந்த பொழுதிலும் “கடைசி ஆட்டத்தில் வெற்றியோடு விடை பெறுவோம்”, “சாம்பியன் பிரேசிலை வீழ்த்துவோம்” என்ற முழக்கங்களோடு ட்ரம்ஸ் இசையுடன் கேமரூன் ரசிகர்கள் இருக்கையில் அமராமல் தொடர் ஆதரவளித்தனர். வின்சன்ட் வெற்றி கோலின் பொழுது கேமரூன் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பால் லுஸைல் நகரமே குலுங்கியது. ஆனால் பிரேசில் ரசிகர்கள் “நாங்கள் நாக் அவுட்டுக்கு சென்றுவிட்டோம்” என பொழுது போக்கிற்காக இருக்கையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். 

உருகுவே அணிக்கு  இது தேவையில்லாதது

குரூப் “எச்” பிரிவில் 2 முறை  சாம்பியனான உருகுவே அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் கானா அணியை வீழ்த்தினாலும், போது மான கோல் புள்ளிகள் இல்லாததால் கத்தார் உலகக்கோப்பை தொடரில் பரி தாபமாக வெளியேறியது. ஆட்டம் முடிந்தவுடன் பெனால்டி பிரச்சனைக்கு நியாயம் கேட்க கள நடுவர் டேனியல் சீபர்ட்டை (ஜெர்மனி) உருகுவே சுற்றி வளைத்தனர். ஆனால் டேனியல் எவ்  வித பதிலும் அளிக்காமல் மைதானத்திலி ருந்து வெளியேற முயற்சித்தார். ஆனா லும் உருகுவே வீரர்கள் விடாமல் துரத்தி னர். பொதுவாக கால்பந்து விளையாட் டின் விதிகளின் படி களத்திலேயே (கள)  நடுவரிடம் வாக்குவாதம் செய்ய முடி யாது. ரெட் கார்டு கொடுத்துவிடுவார் வெளியே அனுப்பி விடுவார். ஆனால் போட்டி முடிந்த பொழுது கள நடுவரை  வசைபாடுவது மிகப்பெரிய பின்விளை வை ஏற்படுத்தும். ஒரு போட்டியில் அல்  லது ஒரு தொடரில் போதுமான ஆட்டங்க ளில் சம்மந்தப்பட்ட வீரர்களோ அல்லது  அணிகளையோ சஸ்பெண்ட் செய்யும்  அளவிற்கு நடவடிக்கை கூட பாயலாம்.  உருகுவே அணி உலகின் முதன்மை யான தொடரில் இப்படி ஒழுங்கீனமான செயலில் ஈடுபட்டுள்ள நிலையில், சர்வ தேச கால்பந்து சம்மேளனம் (பிபா)  இந்த விவகாரத்தில் எப்படி நடவடிக்கை எடுக்கிறது என்று பார்ப்போம். குரூப் “எச்” பிரிவில் தென் கொரியா,  உருகுவே ஆகிய அணிகள் 4 புள்ளிகளு டன் சரிசமமாக இருந்த நிலையில், கோல்  கள் அடிப்படையில் தென்கொரியா (4), உருகுவேயை (2) பின்னுக்குத்தள்ளி  நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. இந்த பிரிவில் ரொனால்டோவின் போர்ச்  சுக்கல் அணி முதல் அணியாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. போர்ச்சுக்கல் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இளம் அணியான தென் கொரியாவை வீழ்த்தியது.

நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய அணிகள்

குரூப் “ஏ” - நெதர்லாந்து, செனகல்
குரூப் “பி” - இங்கிலாந்து, அமெரிக்கா
குரூப் “சி” - அர்ஜெண்டினா, போலந்து 
குரூப் “டி” - பிரான்ஸ், ஆஸ்திரேலியா
குரூப் “இ” - ஜப்பான், ஸ்பெயின்
குரூப் “எப்” - மொரோக்கோ, குரோஷியா
குரூப் “ஜி” - பிரேசில், சுவிட்சர்லாந்து 
குரூப் “எச்” - போர்ச்சுக்கல், தென்கொரியா

கடைசி கட்ட லீக் ஆட்டங்களில் தென்கொரியா, சுவிட்சர்லாந்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு  தகுதி பெற்றன.
 

 

;