64 ஆண்டுகள் காத்திருப்பிற்குப் பிறகு உலகக்கோப்பைப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுள்ள வேல்ஸ் அணி தனது முதல் லீக் சுற்று ஆட்டத்தில் பலமான அமெரிக்காவை எதிர்கொள்கிறது. கடைசியாக 1958-ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் விளையாடிய வேல்ஸ் அணி அந்த சீசனில் காலிறுதிக்கு முன்னேறியிருந்தது. அதன்பின் 64 ஆண்டுகள் உலகக்கோப்பை கால்பந்து பக்கம் எட்டி கூட பார்க்கவில்லை. நடப்பு சீசனில் காரெத் பாலே, ஆரோன் நம்ஸி, டேனியல் ஜேம்ஸ், நிக்கோ வில்லியம்ஸ், பென் டேவிஸ் போன்ற அபாயகரமான வீரர்கள் இருப்பதால் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு எளிதாக முன்னேறும் நம்பிக்கையுடன் இருக்கிறது. வட அமெரிக்கக் கண்டத்தின் தகுதிச்சுற்று ஆட்டங்களில் 3-வது இடத்தைப் பிடித்து அமெரிக்கா இந்த உலகக்கோப்பை போட்டிகளில் கிறிஸ்டியன் பூலிஸச், வெஸ்டன் மக்கெனி, ப்ரண்டன் ஆரோன்ஸன், ஜெர்ஜியோ டெஸ்ட் ஆகிய இளம்படையினருடன் பங்கேற்கிறது. முதல் உலகக் கோப்பை போட்டியில் மூன்றாவது இடம் பெற்றது மட்டுமே இதுவரை அமெரிக்காவின் சாதனையாக உள்ளது. தகுதிச் சுற்று ஆட்டங்களில் 7 வெற்றி, 3 தோல்வி, 4 சமநிலை பெற்றிருந்தது.
அமெரிக்கா - வேல்ஸ் (4-வது லீக்)
நேரம் : நள்ளிரவு
12:30 மணி (திங்களன்று அதிகாலை)
இடம் : அல் ரய்யான்