games

img

கிளப் உலகக்கோப்பை கால்பந்து 2023 முதல் சுற்று ஆட்டத்தில் அல் அக்லி அபாரம்

உலகில் உள்ள 6 கண்டங்களில் தனித்தனியாக நடைபெறும் கிளப் சாம்பியன்ஷிப் போட்டிகளில், சாம்பி யன் பட்டம் வென்ற அணிகள் பங்கேற்கும் கிளப் உலகக்கோப்பை கால்பந்து ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவில் நடைபெற்று வருகிறது. 2 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த தொடரின் 19-வது சீசனில் மொத்தம்  7 அணிகள் (கண்ட சாம்பியன் 6 அணிகள்,  போட்டியை நடத்தும் நாடு சார்பாக மேலும் ஒரு அணி)  களமிறங்கியுள்ள நிலையில்,  முதல் சுற்று ஆட்டத்தில் அல் அக்லி (எகிப்து  - ஆப்பிரிக்க ரன்னர்) அணி ஆக்லாந்து சிட்டி (நியூசிலாந்து - ஓசியானியா சாம்பியன்) அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. தோல்வி மூலம் ஆக்லாந்து சிட்டி அணி வெளியேறிய நிலையில், சனியன்று 2-வது சுற்று ஆட்டங்கள் தொடங்குகிறது.  

(2-வது சுற்றின் இரண்டாவது ஆட்டம்)

சீட்டல் சவுண்டர்ஸ் 
(அமெரிக்க சாம்பியன்)-
 அல் அக்லி (ஆப்பிரிக்க ரன்னர்)
நேரம் : இரவு 10:30 மணி
இடம் : கிராண்ட் மைதானம், மொரோக்கோ

சேனல் : ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி பயனர்கள் மட்டும் பிபா+ (FIFA +) சேனல் மூலம் இலவசமாக காணலாம்.  மற்ற தொலைக்காட்சி சேனலுக்கு கட்டணம் உண்டு.

நாளை 
2-வது சுற்று 
ஆட்டம் தொடக்கம்(முதல்)

வியாதத்சி 
(ஆப்பிரிக்க சாம்பியன்) - அல் ஹிலால் 
(ஆசிய சாம்பியன்)
நேரம் 
இரவு 8:00 மணி
இடம் 
பிரின்ஸ் மைதானம், மொரோக்கோ

;