games

img

ஒன்றரை வருடத்தில் 11 விருதுகள்

திருவனந்தபுரம், டிச.19- பினராயி விஜயன் தலை மையிலான இரண்டாவது அரசு ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில் சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள்  மேம்பாட்டுத் துறைகள் மட்டும் 11 விருதுகளை வென்றுள் ளது. இந்தியா டுடேயின் 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த  ஆரோக்கியத்திற்கான விருதையும் அண்மையில் பெற்றுள்ளது.

கேரளம் பெற்றுள்ள விருதுகள்

• மகப்பேறு இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் சிறப்பாகச் செயல்படும் மாநிலத்திற்கான தேசிய விருது • ஆரோக்கிய மந்தன் விருது 2021, 2022 அதிக முறை சுகாதாரத்துக்கான தேசிய தரநிர்ணய (NQAS) அங்கீகாரம் பெற்ற மாநிலம் • காசநோய் தடுப்புக்கான தேசிய விருது • உணவுப் பாதுகாப்புக் குறியீட்டில் இரண்டாவது இடம் • இந்தியா டுடேயின் ஹெல்த்கிரி விருது • இ சஞ்சீவினி - காருண்யா பெனிவலன்ட் ஃபண்ட் கவர்னஸ் நவ்வின் டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் விருது • பெண்கள் மேம்பாட்டுக் கழகத்திற்கான தேசிய சேனலைசிங் ஏஜென்சி விருது • AFSSAI - இன் ஈட் ரைட் சேலஞ்சில் நான்கு நகரங்களுக்கான (கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, காசர்கோடு) தேசிய விருது.

‘கேரள மாடல்’

• இலவச சிகிச்சைக்கான தொகை ரூ.700 கோடியில் இருந்து ரூ.1400 கோடியாக உயர்த்தப்பட்டது (ஒன்றிய அரசின் பங்கு ரூ.138 கோடி) • 481 சுகாதார நிலையங்களில் இ-ஹெல்த் • அரசு மருத்துவமனைகளில் ஆன்லைன் ஓ.பி டிக்கெட் • நாட்டின் முதல் ஊனமுற்றோர் நட்பு உறுப்பினர் அட்டை • நாட்டின் முதல் இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை (மாவட்ட மருத்துவமனையில்) • நாட்டின் முதல் மாநிலமாக ஆன்டி-பயோகிராம் தொடங்கப்பட்டது • அரசு மருத்துவமனைகளில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை • புற்றுநோய் மருந்துகளுக்கு இரட்டிப்புத் தொகை (மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஒதுக்கீடு ரூ.12.17 கோடியில் இருந்து ரூ.25.42 கோடியாக அதிகரித்தது) •கோந்நி மற்றும் இடுக்கி மருத்துவக் கல்லூரிகளுக்கும் மாஞ்சேரி நர்சிங் கல்லூரிக்கும் ஒப்புதல்.