பாரா ஒலிம்பிக் 2024
பதக்க வேட்டையை துவங்கியது சீனா
17ஆவது சீசன் பாரா ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் புதனன்று சிறப்பு கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. செப்டம்பர் 8 வரை நடைபெறும் இந்த பாரா ஒலிம்பிக் தொடரில் 169 நாடு களைச் சேர்ந்த 4,400 வீரர் - வீராங் கனைகள் களமிறங்கியுள்ள நிலையில், இந்தியா சார்பில் இதுவரை இல்லாத வகையில் 84 வீரர்-வீராங்கனைகள் (52 வீரர்களும், 32 வீராங்கனைகளும்) பதக்க வேட்டை நிகழ்த்த பாரீஸில் பாரா ஒலிம்பிக் தொடரில் களம்கண்டுள்ளனர்.
இந்நிலையில், பாரீஸ் நகரில் கடந்த மாதம் நடைபெற்ற பொதுவான ஒலிம்பிக் தொடரைப் போன்று, பாரா ஒலிம்பிக் தொடரிலும் பதக்க வேட்டை யை துவங்கியது சீனா. வெள்ளியன்று மாலை 5 மணி நிலவரப்படி பதக்கப்பட்டி யலில் சீனா 4 தங்கம், 1 வெள்ளி என 5 பதக்கங்களுடன் முதலிடத்தில் இருந்தது. பிரிட்டன் 2 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் என 6 பதக்கங் களுடன் இரண்டாவது இடத்திலும், இத்தாலி 2 தங்கம், 2 வெள்ளி, 5 வெண் கலம் என 9 பதக்கங்களுடன் 3ஆவது இடத்தில் இருந்தன. 1 தங்கம், 1 வெண்கலம் என 2 பதக்கங்களுடன் இந்தியா 9ஆவது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2024
அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் தொடரின் 144ஆவது சீசன் நியூயார்க் நகரில் ஆகஸ்ட் 26 அன்று தொடங்கிய நிலையில், தற்போது இந்த தொடரில் ரவுண்ட் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்திய நேரப்படி வெள்ளியன்று அதிகாலை நடைபெற்ற ஆடவர் ஒற்றை யர் பிரிவு 2ஆவது சுற்று ஆட்டத்தில் உல கத் தரவரிசையில் 3ஆவது இடத்தில் உள்ள ஸ்பெயினின் அல்காரஸ், தர வரிசையில் இல்லாத நெதர்லாந்தின் போடிக் வான் டி-யை எதிர்கொண்டார். அல்காரஸ் அதிரடியாக விளையாடக் கூடியவர் என்பதால், இந்த ஆட்டத்தில் அவர் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அல்காரஸின் அதிரடி தாக்குதல்களை சமாளித்தும், ரிவர்ஸ் ஷாட்களில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியும் போடிக் வான் டி 6-1, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று 3ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். சமீபத்தில் நிறைவுப் பெற்ற விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸ், அனுபவம் இல்லாத நெதர்லாந்தின் போடிக் வான் டி-யி டம் வீழ்ந்தது டென்னிஸ் உலகில் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி யுள்ளது.
நெதர்லாந்தின் போடிக் போல மெத்வதேவ் (ரஷ்யா), பவுல் (அமெ ரிக்கா), எவன்ஸ் (பிரிட்டன்), டி மினார் (ஆஸ்திரேலியா) ஆகியோரும் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
வொஸ்னியாக்கி அபாரம்
மகளிர் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்று ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் அதிரடிக்கு பெயர் பெற்ற டென்மார்க்கின் கரோலினா வொஸ்னியாக்கி, மெக்ஸிக்கோவின் ரெனாட்டாவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய வொஸ்னியாக்கி 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றார். வொஸ்னியாக்கி போல அனஸ்டாஸியா (ரஷ்யா), பெகுலா (அமெரிக்கா) ஆகியோரும் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர். ஆனால் முன்னணி வீராங்கனைகளான ஜப்பானின் ஒசாகா, கஜகஸ்தானின் எலினா ரைபகினா ஆகியோர் அதிர்ச்சி தோல்வியுடன் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விடைபெற்றனர்.