games

img

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடர் - பதக்கப்பட்டியலில் நார்வே முதலிடத்தில் 

சீனாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கப்பட்டியலில் நார்வே முதலிடத்தில் உள்ளது.

கொரோனா பதற்றத்துக்கு இடையே சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் பரபரப்பாக நடைபெற்று வரும் 24வது குளிர்கால ஒலிம்பிக் தொடரில் ஸ்லோப்ஸ்டைல் எனப்படும் பனியில் சறுக்கிக்கொண்டே பறக்கும் போட்டியில் அமெரிக்க வீரர்கள் அலெக்ஸ் ஹேல் மற்றும் நிகோலஸ் கோப்பர் ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை வென்றனர். ஸ்வீடன் நாட்டின் ஜெஸ்பர் ஜாடர் வெண்கலப்பதக்கம் வென்றார். 

ஆண்கள் ஐஸ் ஹாக்கி போட்டியில் காலிறுதி ஆட்டத்தில் ஸ்லோவாக்கிய அணி அரையிறுதிக்குத் தகுதிபெற்றது. இதன் மூலம் குளிர்கால ஒலிம்பிக் வரலாற்றில் முதல் பதக்கம் வெல்லும் வாய்ப்பை ஸ்லோவாக்கியா நெருங்கியுள்ளது. ஸ்பீடு ஸ்கேட்டிங் பிரிவின் இறுதிப்போட்டியில்  நடப்பு சாம்பியனான ஜப்பானைக் கனடா எதிர்கொண்டது. இதில் இறுதிக்கட்டத்தில் ஜப்பான் வீராங்கனை நாநா தகாகி தவறி விழ நேர்ந்ததால் கனடா எளிதில் தங்கப்பதக்கம் வென்றது.

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடர் நிறைவடைய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் 13 தங்கம் உள்ளிட்ட 28 பதக்கங்களுடன் நார்வே அணி பதக்க பட்டியலில் முதலிடத்திலும், ஜெர்மனி 2ஆவது இடத்திலும், அமெரிக்கா 3ஆவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

;