games

img

காமன்வெல்த் விளையாட்டு போட்டியிலிருந்து தமிழ்நாடு வீராங்கனை நீக்கம்!  

காமன்வெல்த் விளையாட்டு போட்டியிலிருந்து தமிழ்நாடு வீராங்கனை தனலட்சுமி, இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.  

காமன்வெல்த் விளையாட்டு போட்டி அடுத்த மாதம்(ஜூலை) 28 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 8 ஆம் தேதிவரை இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடக்கிறது.  இந்த போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றன. இதில் இந்தியாவைச் சேர்ந்த 215 விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 36 பேர் அடங்கிய இந்திய தடகள அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதில் 100மீ மற்றும் 4*100மீ தொடர் ஓட்டங்களில் தமிழகத்தை சேர்ந்த தனலட்சுமி தேர்வானர்.

இந்நிலையில் ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்ததால், தமிழ்நாடு வீராங்கனை தனலட்சுமி, காமன்வெல்த் விளையாட்டு போட்டி இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.  

இதேபோல், மும்முறை தாண்டுதலில் தேசிய சாதனையை முறியடித்த கர்நாடகத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா பாபுவும் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

;