games

img

மீண்டும் வாரோயோ அபிநந்தனா...!

காலை 9 மணி, சென்னை வில்லிவாக்கம் லட்சுமி புரம் இரண்டாவது தெரு உள்ளே நுழைகிறோம். அந்த வீடு முதல் வீடு தான் என்றாலும் தெருவே அமைதியில் உறங்குகிறது. உள்ளே நுழைந்ததும், ஆசை ஆசையாய் கனவுகளுடன் வளர்த்த மகளை பறிகொடுத்த தாயும் தந்தையும் அழுத கண்ணீரை நிறுத்தவில்லை. அந்த  இல்லத்துக்குள் காலடிவைத்ததும்,  பதக்கங் கள் அலங்கரிக்கும் அறையில் அனைவரும் கண்ணீரும் கம்பலையுமாய் வரவேற்றனர். உரையாடியது சிறிது நேரம் தான். இருந்தா லும் அவர்கள் மனதுக்குள் புகைந்து கொண்டிருந்த மகளின் ஆசை கனவுகள், லட்சியங்களை வெளிப்படுத்தியது.

நீச்சலும்-பதக்கமும்

ரமேஷ்-சமியுத்தா தம்பதியின் மூத்த மகள் அபிநந்தனா. சிறு வயது முதல் விளையாட்டில் அளவு கடந்த ஆர்வம்.  இதனால், நீச்சலில் கவனம் செலுத்தினார். செனாய் நகரின் நீச்சல் குளத்தில் முறை யான பயிற்சிக்கு அனுப்பி வைத்தனர் பெற்றோர்.  ஐந்து வயதில் பயிற்சியை துவக்கினா லும், மிக குறுகிய காலத்திலேயே மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக் கங்களை குவித்துள்ளார். மிக விரைவி லேயே மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை அள்ளி வந்தார். 

திசைமாறா பயணம்...

உலகத்தையே புரட்டி போட்ட கொரோ னா பெருந்தொற்று, அபிநந்தனாவின் நீச்சல் பயிற்சிக்கும் தடைக்கல்லானது. விளையாட்டின் மீது இருந்த தீராத காதல், சுமார் 200 நாடுகளில் ஆர்வத்துடன் விளை யாடப்படும் கூடைப்பந்தாட்டம் (basket ball) பக்கம் திருப்பியது.  உடலின் அனைத்து உறுப்புக்களை யும் பயன்படுத்தும் வண்ணம் வடிவமைக் கப்பட்டுள்ள இந்த விளையாட்டில் தன்னால் சாதிக்க முடியும் என்பதால் தனது வீட்டுக்கு மிக அருகாமையில் உள்ள ஐசிஎப் மைதா னத்தில் தினசரி காலை 5 மணிக்கு பயிற்சி க்கு சென்று வந்துள்ளார். இந்த விளையாட்டி லும் பள்ளி மாணவர்களுக்கிடையான போட்டிகளில் பங்கேற்று தனது திறமையை நிரூபித்து தனி முத்திரை பதித்தார் அபி நந்தனா. இளம் வயதிலேயே சிறந்த வீராங்கனை யாக வலம் வந்த அபிநந்தனா சென்னை-திருவள்ளூர் மாவட்ட அணிகளுக்கி டையே நடைபெற்ற 16 வயதுக்குட்பட் டோருக்கான போட்டியில் கேப்டனாக வழி நடத்தும் பொறுப்பும் கொடுத்துள்ளனர்.  தனது பெற்றோருடன் வசித்து வந்த 10-ஆம் வகுப்பு மாணவியும் கூடைப்பந்து வீராங்கனையுமான அபிநந்தனா, துள்ளி குதித்து எதிரணியை மிரளவைக்கும் ஆட்டத்திறன் படைத்தவர். சாதுர்யமாக பந்தை கடத்தி சென்று புள்ளியாக்கும் திற மைச்சாலி. சிறந்த ஓட்டத்திறனும் தற்காப்பு ஆட்டத்திலும் கைதேர்ந்தவர். குழுவாக செயல்படுவதிலும் திறன்படைத்தவர். மொத்தத்தில் சென்னை மாவட்ட அணியின் ‘ஆல் ரவுண்டர்’. 

15 வயதிலேயே கூடைப்பந்து விளை யாட்டில் வல்லமை படைத்தவரான அபி நந்தனா, சமீபத்தில் விருதுநகரில் நடை பெற்ற மாநில அளவிலான போட்டியின் சென்னை மாவட்ட அணியில் இடம் பிடித்தார். இந்த போட்டியில் பங்கேற்ப தற்காக மே 15 அன்று சென்னை தாம்பரத்தி லிருந்து நாகர்கோவில் செல்லும் ரயிலில் விருதுநகர் சென்றுள்ளார்.  இந்நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வில் 425 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றதை மகள் அபிநந்தனாவிடம் அலைபேசி மூலம் பெற்றோர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். கூடைப்பந்து விளையாட்டில் கெத்து காட்டி வரும், தனது மகள் இந்த தொடரி லும் பதக்கம் வென்று கொடுப்பார். கோப் பையுடன் திரும்புவார் என்று குடும்பமே நம்பிக்கையுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தது. ஆனால், மே 22 அன்று  இரவு கிடைத்த அந்த செய்தி ஒட்டு மொத்த குடும்பத்தையும் உறைய வைத்துவிட்டது. முதல் இரண்டு ஆட்டங்களில் விளையா டியுள்ளார். அதன்பிறகு, அவருக்கு காய்ச் சல் இருந்ததாக கூறப்படுகிறது. இதற் காக மாத்திரைகள் எடுத்துக் கொண்டுள்ளார். இருந்தபோதிலும் அவர் முழுமையாக குணமடையவில்லை. இத னால், அடுத்த போட்டிகளில் பங்கேற்க வில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், மே 16 அன்று  சென்றவர்கள் போட்டிகளை முடித்துக் கொண்டு மே 21 அன்று விருதுநகரிலிருந்து சென்னைக்கு திரும்பினர். அப்போது, மதுரை ரயில் நிலையத்தில் அபிநந்தனா மயங்கி விழுந்தாக கூறப்படுகிறது. சிறிது நேரத்திற்குள் முதலுதவி அளித்து, சிகிச் சைக்காக வரவழைக்கப்பட்ட ஆம் புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதனை செய்த தில் அவரது உயிர் ஏற்கெனவே பிரிந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகி யுள்ளனர். 

கண்ணீரில் குளத்தில்...

அபிநந்தனாவின் உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிறகு, சென்னைக்கு கொண்டு வரப்பட்டு அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. சக வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்தனர். சிறு வயதிலிருந்தே அதிக ஆர்வத்துடன் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் அபிநந்தனாவின் ஆரம்பகால நீச்சல் பயிற்சியாளரான சந்திரசேகர், கூடைப் பந்து விளையாட்டு சங்கத்தின் பொதுச் செயலாளர் அர்ஜூன் யாதவ் உள்ளிட்ட பல ரையும் இந்த மரணம் பெரும் அதிர்ச்சி யடைய வைத்திருக்கிறது.  மிக சிறந்த வீராங்கனையாக பள்ளிகள் மற்றும் ஜூனியர் பிரிவில் பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களின் ஆரோக்கியத்தில் மட்டுமல்லாமல் உடனி ருந்து கவனித்துக்கொள்ள பெற்றோர் அல்லது உறவினர்களை அழைத்து செல்ல வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டியுள்ளது. பயிற்சியாளர்கள் வீராங்க னைகளிடம் எந்த நேரத்தில், எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்ன மாதிரி யான பயிற்சி கொடுக்க வேண்டும் என்பது குறித்தும் உளவியல் ரீதியாக ஆலோசனைகளை வழங்க வேண்டியுள்ள தால் விளையாட்டு துறைக்கு புதிதாக  பொறுப்பேற்றிருக்கும் இளம் அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

சி.ஸ்ரீராமுலு


 

;