games

img

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ரூ. 1 கோடி லஞ்சம் கேட்டார்.. விளையாட்டு வீராங்கனை வர்த்திகா சிங் பரபரப்பு புகார்

புதுதில்லி:
சர்வதேச துப்பாக்கிச் சுடுதல்வீராங்கனையான வர்த்திகா சிங்கிடம், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ரூ. 1 கோடிலஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டுஎழுந்துள்ளது.

இந்தியாவின் பிரபல துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங். சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் பங்கேற்றவர். நிர்பயா பாலியல்வன்கொலை வழக்கில், தொட ர்புடைய குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கு ஆட்கள் இல்லை என்றபோது, அந்தப் பணியை, தான் செய்கிறேன் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.தற்போது இவர், பாஜக தலைவரும், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சருமான ஸ்மிருதிஇரானி மீது ஊழல் குற்றச்சாட்டுஎழுப்பியுள்ளார்.

\தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக ஆவதற்கான விலை ரூ. 1 கோடி என்றும்,அதைத்தந்தால் உறுப்பினர் ஆகலாம் என்று ஸ்மிருதி இரானிதன்னிடம் லஞ்சம் கேட்டதாக கூறியுள்ளார். பின்னர் தனது விவரக் குறிப்புகளை பார்த்தபின், லஞ்சத்தை ரூ. 25 லட்சமாக குறைத்ததாக கூறியிருக்கும் வர்த்திகா சிங், மத்தியஅமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் அவரது உதவியாளர் களால், தான் தவறாக வழிநடத்தப்பட்டேன் என்று பகிரங்க மாக குற்றம்சாட்டியுள்ளார்.ஸ்மிருதி இரானியின் நெருங்கிய தொடர்பில் இருக்கும் ஒருவர், தன்னை சமூக ஊடகங்களில் அவதூறாகபேசினார் என்றும் கூறியிருக்கும்வர்த்திகா சிங், ரூ. 25 லட்சம் லஞ்சம் கேட்டது தொடர்பாக மத்திய பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் அவரது தனிச் செயலாளர் உள்ளிட்ட 3 பேர் மீது தற்போது புகார் அளித்துள்ளார்.

;