சென்னை:
அடுத்த மாதம் 23ஆம் தேதி தொடங்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ. 3 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி போடும் முகாம் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,” விளையாட்டு வீரர் கள் அடுத்த தலைமுறைக்கு ஊக்கம் அளிக்கக் கூடியவர்கள். 12 வயதுக்குள் விளையாட்டு வீரர் களின் திறமையை நாம் அடையாளம் கொள்ள வேண்டும்” என்றார்.விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. தமிழ்நாட் டைச் சேர்ந்த வீரர்களுக்கு தமிழக அரசுப் பணி வழங்கப்பட்டு வருகிறது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஏழு தமிழக வீரர், வீராங்கனை கள் கலந்துகொள் வது மகிழ்ச்சி என்றும் முதல்வர் கூறினார்.
ஒலிம்பிக் போட்டியில் பங் கேற்கும் சென்னையைச் சேர்ந்த வாள்சண்டை வீராங்கனை பவானி தேவிக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 வீரர்களுக்கும் அந்த ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது என் றும் உலக அரங்கில் விளையாடும் வீரர்களை உற்சாகப் படுத்த வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. எனவே, ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் வீரர்களுக்கு 3 கோடியும், வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ. 2 கோடியும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ. 1 கோடியும் தமிழக அரசால் வழங்கப்படும். தமிழக வீரர் களே சென்று வருக, தரணியை வென்று வருக என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்தினார்.ஒலிம்பிக் போட்டியில் பங் கேற்கும் ஆறு விளையாட்டு வீரர் களுக்கு தலா ரூ. 5 லட்சம் ஊக்கத் தொகையை இந்த விழாவில் முதல்வர் வழங்கினார். அமைச் சர்கள் பி.கே.சேகர்பாபு, மா. சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர்கள் உதயநிதி ஸ்டாலின், எழிலன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.