டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஆடவர் பளுதூக்குதலில் 73 கிலோ எடைப் பிரிவில் சீன வீரர் ஷி ஜியாங் தனது முந்தைய உலக சாதனையை முறியடித்து புது சாதனை படைத்தார்.
73 கிலோ எடைப் பிரிவில் களமிறங்கிய ஷி ஜியாங் ஒட்டு மொத்தமாக 364 கிலோ எடையைத் தூக்கி தனது பழைய உலக சாதனையான 364 கிலோவை முறியடித்து தங்கம் வென்றார்.
ஏற்கனவே ஷி ஜியாங், கடந்த 2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் 69 கிலோ எடைப்பிரிவில் களமிறங்கி அப்போதைய உலக சாதனையை முறியடித்து தங்கம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், இப்போட்டியில் வெனிசூலா வீரர் ஷி ஜியாங் ஜூலியோ ரூபன் மயோரா பெர்னியா வெள்ளிப் பதக்கமும், இந்தோனேசியாவின் ரஹ்மத் எர்வின்
அப்துல்லா வெண்கலமும் வென்றனர்.