games

img

இந்திய அரசோ, தடகள சம்மேளனமோ எந்த உதவியும் செய்யவில்லை... ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ராவை வஞ்சித்தார்கள்.... பயிற்சியாளர் குற்றச்சாட்டு...

டோக்கியோ:
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் விளையாட்டில்  தங்கம் வென்றஇந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு இந்திய அரசோ, தடகள சம்மேளனமோ எந்த உதவியும் செய்யவில்லை. போதிய உணவு கூட இந்தியவிளையாட்டுத்துறை வழங்கவில்லை என்று அவரது பயிற்சியாளர் குற்றம்சாட்டியுள்ளார். 120 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் தடகளப் போட்டியில்இந்திய வீரர் ஒருவர் தங்கப்பதக்க த்தை வென்றுள்ளார். இந்த சாதனையை புரிந்த நீரஜ் சோப்ராவுக்கு இந்திய மக்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்தியாவில் அதிக ஸ்பான்சர்கள் மற்றும் விளம்பரங்கள் மூலம் வருவாய் கொட்டும் கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுகளையும் அதன் விளையாட்டு வீரர்களையும் ஒன்றிய அரசோ, விளையாட்டுத்துறையோ கண்டு கொள்ளாத போக்கு நீடித்துவருகிறது. சர்வதேச போட்டிகளில் பங்கு பெறும் வீரர்களுக்கு போதிய நிதி யுதவியோ, பயிற்சியோ இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப் படுகிறது. ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு ஒடிசா மாநில அரசு தான் ஸ்பான்சராக இருந்து அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. 

இந்நிலையில், நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளர் உவே ஹான் இந்தியவிளையாட்டுத்துறை மீது அடுக்கடுக் கான பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அதிர்ச்சியை கிளப்பி யுள்ளார்.இதுகுறித்து அவர் செய்தியாளர் களிடம் கூறுகையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு இந்திய விளையாட்டு ஆணையம், தடகள சம்மேளனம் தங்களுக்கு எந்த ஒரு உதவியையும் செய்யவில்லை.  விளையாட்டு வீரர்களுக்கு உயர்தர உணவையும் கொடுக்கவில்லை. தமக்கு ஒத்துவராத விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு இந்திய அதிகாரிகள் மிரட்டினர். நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்கில் பங்கேற்க அரசுத் தரப்பில் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. ஆசிய போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதால் அவரை கேஎஸ்டபிள்யு நிறுவனமே ஸ்பான்சர் அளித்து உதவி யது என்று தெரிவித்துள்ளார்.