games

img

ஒரே நாளில் 5 பதக்கம்.... 1ம் பக்கத் தொடர்ச்சி...

சீன வீராங்கனை ஜங் (248.9 புள்ளிகள்) வெள்ளியையும், உக்ரைன் வீராங்கனை ரைனா (227.5 புள்ளிகள்) வெண்கலத்தையும் வென்றனர். 

                                 ***************

சுமித் - தங்கம் 

ஆடவர் ஈட்டி எறிதல் எப் - 64 பிரிவில் இந்திய வீரர் சுமித் அன்டில் 68.55 மீ தூரம் ஈட்டியை எறிந்து உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இந்த பிரிவில் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் (66.29 மீ)  வெள்ளியையும், இலங்கை வீரர் துலான் (65.61 மீ) வெண்கலமும் வென்றனர். மற்றொரு இந்திய வீரர் சந்தீப் (62.20 மீ) 4-வது இடத்தை பிடித்து வெண்கலத்தை இழந்தார். 

                                 ***************

கதுனியா யோகேஷ்  - வெள்ளி  

ஆடவர் வட்டு எறிதல் (உட்கார்ந்து கொண்டு (எப் - 56)) பிரிவில் இந்திய வீரர் கதுனியா யோகேஷ் கடும் போராட்டத்துக்கு இடையே கடைசி வாய்ப்பில் 44.38 மீ தூரம் வட்டை வீசி வெள்ளிப்பதக்கம் வென்றார். பிரேசில் வீரர் பாடிஸ்டா (45.59 மீ) தங்கமும், கியூபா வீரர் டியாஜ் அல்தானா (43.36 மீ) வெண்கலத்தையும் வென்றனர்.    

                                 ***************

ஜஜாரியாவுக்கு வெள்ளி, சுந்தர் சிங்கிற்கு வெண்கலம்  

ஆடவர் ஈட்டி எறிதல் எப் - 45 பிரிவில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா (எப் - 46) 64.35 மீ தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் சுந்தர் சிங் (எப் - 46) (64.01மீ) வெண்கலப்பதக்கம் வென்றார். இலங்கை வீரர் தினேஷ் (எப்-46) உலக சாதனையுடன் 67.79 மீ தூரம் ஈட்டியை எறிந்து தங்கப்பதக்கம்வென்றார்.  இந்தியா 6-ஆம் நாளில் (மாலை 6  மணி நிலவரப்படி) 2 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களுடன் 26ஆம் இடத்தில் உள்ளது.

                                 ***************

திரும்பப் பெறப்பட்ட பதக்கம்

வட்டு எறிதல் (உட்கார்ந்த நிலையில்) பிரிவில் வெண்கல பதக்கம் வென்றிருந்த வினோத் குமாரின் பதக்கம் பறிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தசைபலம் தளர்வு, கை, கால்களில் குறைபாடு மற்றும் முதுகு தண்டுவட பாதிப்பு ஆகிய பாதிப்புகள் இருக்கும் பிரிவு எப் 52 ஆகும். ஆனால் வினோத் குமாரின் உடல்நிலை விதிக்கு புறம்பாக இருந்ததாக கூறி அவரது  வெண்கல பதக்கம் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   இதனால் பதக்க எண்ணிக்கையில் ஒன்று குறைந்துள்ளது.