இந்த தொடரில் தொடக்கம் முதலே பதக்கக் குவிப்பில் ஆதிக்கம் செலுத்திய சீனா, கடைசி நாளில் அமெரிக்காவிடம் முதலிடத்தை பறிகொடுத்தது. இதனை விளையாட்டு உலகம் எதிர்பார்க்கவில்லை. காரணம் ஒலிம்பிக் தொடரின் 2-வது வாரத்தின் அனைத்து நாட்களும் முதலிட சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த சீனா டோக்கியோ ஒலிம்பிக்கில் முதலிட அந்தஸ்துடன் வெற்றி வாகை சூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நாளில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்த எதிர்பார்த்த வியூகங்கள் அப்படியே தலைகீழாக மாறியது.
கடைசி நாளில் அமெரிக்கா 3 தங்கம், 2 வெள்ளி என 5 பதக்கம் குவித்தது. ஆனால் சீன ஒரே ஒரு வெள்ளியை மட்டுமே கைப்பற்றியது. இதனால் தான் சீனா முதலிடத்தை இழந்தது. அமெரிக்கா கடைசி நாள் தங்க பதக்க வேட்டையின் பலனால் 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் என மொத்தம் 113 பதக்கத்துடன் முதலிட அந்தஸ்து பெற்றது. சீனா இரண்டாவது இடத்தையும், போட்டியை நடத்தும் ஜப்பான் 3-வது இடத்தையும் பிடித்தன.
நாடுகள் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
அமெரிக்கா 39 41 33 113
சீனா 38 32 18 88
ஜப்பான் 27 14 17 58
இந்தியா 1 2 4 07