games

img

விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் சாம்பியன்

144ஆவது சீசன் அமெரிக்க கிராண்ட்ஸ்லாம் போட்டி ஞாயிறன்று நிறைவுபெற்றது. இந்த தொடரின் கடைசி நிகழ்வான ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் ஞாயிறன்று நள்ளிரவு நடைபெற்றது.  இறுதி ஆட்டத்தில் தரவரிசை யில் முதலிடத்தில் உள்ள இத்தாலி யின் ஜானிக் சின்னர், தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள ஸ்பெயி னின் அல்காரஸ் பலப்பரீட்சை நடத்தி னர். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ் 6-2, 3-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று, 2 ஆவது முறையாக (முன்னர் 2022ஆம் ஆண்டு சாம்பியன்) சாம்பியன் பட்டம் வென் றார். அல்காரஸுக்கு இது 6ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். நடப்பு சாம்பியனான சின்னர் அதிர்ச்சி தோல்வியுடன் வெளியேறி னார். சின்னர் இதுவரை 4 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று ள்ளார். சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸ் ரூ.44 கோடியும், இரண்டாம் பிடித்த சின்னர் ரூ.22 கோடியும் பரிசுத்தொகையாக வென்றனர். அதே போல அரையிறுதி, காலிறுதி, ரவுண்ட்ஸ் சுற்றுகளில் வெளியேறியவர்களுக்கும் குறிப்பிட்ட அளவு பரிசுத்தொகை வழ ங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டின் மரபு தெரியாமல்  எதற்கு வந்தார் டிரம்ப்?

145ஆவது சீசன் அமெரிக்க கிராண்ட்ஸ்லாம் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தை காண அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மைதானத்திற்கு வந்தார். போட்டி நிறைவு பெற்ற பொழுது  மைதானத்தில் குவிந்து இருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி அல்காரஸுக்கு வாழ்த்து தெரிவித்தனர். கோப்பையை பறிகொடுத்த இத்தாலி நாட்டினர் (சின்னர்) கூட அல்காரஸுக்கு உற்சாகமாக கைத்தட்டி ஆரவாரம் எழுப்பினர். ஆனால் போட்டியை நடத்தும் நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் எழுந்து நின்று வேடிக்கை மட்டுமே பார்த்தார். புன்னகைக்கவில்லை ; கைத்தட்டவில்லை. விளையாட்டின் மரபில் வாழ்த்து (கைகொடுத்தல், கைத்தட்டுதல், கட்டியணைத்தல்) என்பது மிக முக்கியம் என்ற நிலையில், டிரம்பின் செயலுக்கு சமூகவலைத்தளங்களில்  ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.