games

img

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு தங்கம்!  

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவர் ஸ்கீட் தனிநபர் பிரிவில் இந்தியாவின் மைராஜ் அகமது கான் தங்கம்பதக்கம் வென்றார்.  

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தென்கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஆண்களுக்கான ஸ்கீட் தனிநபர் பிரிவில் இறுதி சுற்றில் இந்திய வீரர் மைராஜ் அகமது கான், 40 ஷாட்களுக்கு 37 ஷாட்களுடன் முதலிடம் பிடித்தார்.

இதன்மூலம் உலகக் கோப்பை போட்டியில் ஸ்கீட் தனிநபர் பிரிவில் தங்கப்பதக்கம் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். தென்கொரியாவின் வீரர் மின்சு கிம் 36 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், இங்கிலாந்து வீரர் பென் லிவிலின் 26 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.  

இதையடுத்து, பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில், இந்தியாவின் அஞ்சும் மோட்ஜில், ஆஷி சோக்சி, சிப்ட் கவுர் சம்ரா ஆகியோர் அடங்கிய 16-6 என்ற புள்ளி கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை வென்றது.  

மகளிருக்கான தனிநபர் ஸ்கீட் பிரிவில் முஃபாதல் தீசாவலா 23வது இடத்தை பிடித்தார்.  

இந்த போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என 13 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.