games

img

விளையாட்டு...

மகளிர் டி-20 உலகக்கோப்பை 2024 இன்று 2ஆவது அரையிறுதி ஆட்டம்

9ஆவது சீசன் உலகக்கோப்பை டி-20 தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வெள்ளியன்று நடைபெறும் 2ஆவது அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் மோதுகின்றன.  3ஆவது முறையாக இறுதிக்கு முன்னேறி முதல் முறையாக டி-20 உலகக்கோப்பையை கையில் ஏந்தும் முனைப்பில் நியூஸிலாந்து அணியும், இரண்டாவது முறையாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று 2ஆவது  முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் மேற்கு இந்தி யத் தீவுகள் அணியும் என இரு அணி களும் வெற்றியின் மீது குறியாக கள மிறங்குவதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இடம் : 
ஷார்ஜா மைதானம்
நேரம் : 
இரவு 7:30 மணி
சேனல் ; ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஒடிடி)

பெங்களூரு டெஸ்ட் நியூஸிலாந்து அபார பந்துவீச்சு 46 ரன்களில் சுருண்ட இந்தியா

3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங் கேற்க இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது நியூஸிலாந்து கிரிக்கெட் அணி. இந்த டெஸ்ட் தொட ரின் முதல் ஆட்டம் புதனன்று கர்நாடக தலைநகர் பெங்களூருவில் தொடங்கி யது. பலத்த மழையால் முதல் நாள்  ஆட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து 2ஆவது நாள் ஆட்டம் வியாழனன்று நடைபெற்றது. 5 தங்க முட்டை டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் கள மிறங்கியது. பிட்ச் தன்மையை திடமாக கணித்து நியூஸிலாந்து அணி தொடக் கம் முதலே சிறப்பாக பந்துவீசியதால் இந்திய பேட்டர்கள் திணறினர். நியூஸி லாந்து அணியின் மூத்த வீரர் டிம் சவுத்தி ஒரு விக்கெட் எடுத்த பின்பு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க ஒதுங்கினார். டிம் சவுத்தி கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட இளம் வீரர்களான ஹென்றி, வில்லியம் இந்திய பேட்டர்கள் மீது பவுன்சர் கலந்த ஸ்விங் பந்துவீச்சு மூலம் தாக்குதல் தொடுத்தனர். ஹென்றி -  வில்லியம் தாக்குதலால் நிலை குலைந்த இந்திய அணி 31.2 ஓவர் களில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் (20), தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் (13)  ஆகிய இருவர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த னர். மற்ற அனைவரும் ஒற்றை இலக்கங் களில் பெவிலியன் திரும்பினர். இதில் 5 தங்க முட்டைகளும் (விராட் கோலி, சர்பிராஸ் கான், கே.எல்.ராகுல், ஜடேஜா, அஸ்வின்) பொருந்தும். நியூசிலாந்து அணி தரப்பில் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், வில்லியம் 4 விக்கெட்டுகளையும்,  டிம் சவுத்தி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். நியூஸிலாந்து அணி நிதானம் பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூஸிலாந்து நிதானமாக ரன் குவித்தது. 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 180  ரன்கள் எடுத்து இருந்தது.  வெள்ளியன்று தொடர்ந்து 3ஆம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. 

மிதவேக தாக்குதல் மூலம் இந்தியாவை துவம்சம் செய்த ஹென்றி - வில்லியம்

தற்போதைய கிரிக்கெட் உலகில் டெஸ்ட், ஒருநாள், டி-20 என 3 பிரிவுகளிலும் சூப்பர் பார்மில் உள்ளது இந்தியா. இதில் டெஸ்ட் பிரிவில் இந்தியா பிரம்மாண்ட பலத்துடன் உள்ள நிலையில், இதுவரை நடைபெற்ற 2 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் இந்தியா இறுதிக்கு முன்னேறி நூலிழையில் கோப்பையை தவறவிட்டது. இத்தகைய சிறப்புடன் டெஸ்ட் பிரிவில் பலமான அணியான இந்தியாவை வெறும் 46  ரன்னில் சுருட்டியுள்ளனர் நியூஸி லாந்தின் இளம் பந்துவீச்சாளர்களான  ஹென்றி (5 விக்கெட்) - வில்லியம் (4 விக்கெட்) ஜோடி. இருவரும் பெரியளவு வேகத்தில் பந்துவீசவில்லை. சராசரியாக வெறும் 130 கி.மீ., வேகத்தில் (மிதவேக தாக்குதல்) பந்துவீசி இந்திய அணியின் பேட்டிங் வரிசை பந்தாடியுள்ளனர்.