செஸ் உலகக்கோப்பை போட்டி 2025 கோவாவில் நடைபெறுகிறது
செஸ் உலகக்கோப்பை போட்டி வரும் அக்டோபர் 30ஆம் தேதி முதல் நவம்பர் 27 வரை இந்தியாவில் நடைபெறும் என சர்வதேச செஸ் கூட்டமைப்பு (பிடே) கடந்த ஜூலை மாதம் அறிவித்திருந்தது. ஆனால் போட்டி எந்த நகரத்தில் நடத்தப்படும் என்பது தெரிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை அன்று செஸ் உலகக்கோப்பை தொடர் கோவாவில் வரும் அக்டோபர் 30ஆம் தேதி முதல் நவம்பர் 27 வரை நடைபெறும் என பிடே அறிவித்துள்ளது. இந்தத் தொடரில் 90-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 206 வீரர்கள் கலந்துகொண்டு பட்டம் வெல்ல பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் அடுத்தடுத்து வெளியேறிய 4 நட்சத்திர வீராங்கனைகள்
ஆண்டின் கடைசி கிரா ண்ட்ஸ்லாம் மற்றும் 144 ஆண்டுகால பழமையான டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் தற்போது தொடக்க சுற்று ஆட்டங்கள் (நியூ யார்க் - அமெரிக்கா) நடைபெற்று வரு கின்றன. இந்நிலையில், இந்திய நேரப்படி வியாழக்கிழமை அன்று அதிகாலை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்று ஆட்டங்களில் தரவரிசை யில் முக்கிய இடங்களில் உள்ள 4 நட்ச த்திர வீராங்கனைகள் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்துள்ளனர். பென்கிச் (சுவிஸ்) : தரவரிசையில் 16ஆவது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தின் பென்கிச், தரவரிசையில் இல்லாத அமெரிக்கா வின் ஆன் லியிடம் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார். சம்சோனோவா (ரஷ்யா) : தரவரிசையில் 17ஆவது இடத்தில் உள்ள ரஷ்யாவின் சம்சோனோவா வை, தரவரிசையில் இல்லாத ஆஸ்தி ரேலியாவின் பிரெசில்லா ஹான் 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி னார். ஒஸ்டோபென்கோ (லாத்வியா): தரவரிசையில் 25ஆவது இடத்தில் உள்ள லாத்விய வீராங்கனையான ஒஸ்டோபென்கோ, தரவரிசையில் இல்லாத முன்னணி அமெரிக்க வீரா ங்கனையான டவுன்சென்ட் 7-5, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வீழ்த்தினார். எனினும் பெலாரசின் சபலென்கா, கனடாவின் பெர்னாண்டஸ், இத்தாலி யின் பவோலினி, ரஷ்யாவின் ஆண்டீ ரிவா, பெல்ஜியத்தின் மெர்டென்ஸ், கஜகஸ்தானின் ரைபகினா உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் மூன்றா வது சுற்றுக்கு முன்னேறினர்.
டென்மார்க் வீரர் ரூனே அவுட்
மகளிர் பிரிவைப் போல ஆடவர் ஒற்றையர் பிரிவிலும் அதிர்ச்சி தோல்விகள் அரங்கேறி வரு கின்றன. இந்திய நேரப்படி வியாழக்கிழமை அன்று அதி காலை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 11ஆவது இடத்தில் உள்ள டென்மார்க் வீரர் ரூனே, தரவரிசையில் இல்லாத ஜெர்மனி யின் ஸ்ட்ரப்பை எதிர்கொண்டார். இரு வீரர்களும் வெற்றிக்காக கடுமையாக போராடிய நிலையில், ஸ்ட்ரப் 7-6 (7-5), 2-6, 6-3, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று, 3ஆவது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு 2ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 16ஆவது இடத்தில் உள்ள செக்குடியரசின் மென்சிக், தரவரிசையில் இல்லாத பிரான்சின் பிளான்செட்டை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே பரபரப்பாக நடை பெற்ற இந்த ஆட்டத்தில் 6-7 (2-7), 7-6 (7-5), 3-6, 6-4, 7-6 (10-7) என்ற செட் கணக்கில் கடுமையாக போராடி பிளான்செட் 3ஆவது சுற்றுக்கு முன்னேறினார். மென்சிக் அதிர்ச்சி தோல்வியுடன் வெளியேறினார். 3ஆவது சுற்றுக்கு முன்னேறிய வீரர்கள் : ஸ்பெயினின் அல்காரஸ், இத்தாலியின் லூசியானா, அமெரிக்காவின் செல்டான் மற்றும் தியாபோ ஆகியோர் 3ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.