கால்பந்து விளையாட்டில் நெய்மரின் சகாப்தம் விடைபெறுகிறதா?
சோகத்தில் பிரேசில் ரசிகர்கள்
தற்போதைய நவீன கால்பந்து உலகில் பல்வேறு நட்சத்திர வீரர்கள் இருந்தாலும், மும்மூர்த்திகள் என அழைக்கப்படும் 3 பேர் மட்டுமே வரலாற்று பெருமை மற்றும் தர மான, வியக்கத்தக்க கள செயல்பாடு களுடன் உச்சத்தில் உள்ளனர். கணுக்கால் காயம் அந்த மும்மூர்த்திகள் அர்ஜெண்டி னா கேப்டன் மெஸ்ஸி, போர்ச்சுக்கல் கேப்டன் ரொனால்டோ, பிரேசில் கேப்டன் நெய்மர் ஆவர். இதில் மெஸ்ஸி, ரொனால்டோ காயம் மற்றும் பார்ம் பிரச்சனையின்றி மிகவும் நன்றாக விளையாடி வருகின்றனர். ஆனால் நெய்மர் காயம் காரணமாக தொடர் பார்ம் பிரச்சனையில் சிக்கி தவித்து வருகிறார். கடந்த 6 ஆண்டுகளில் நெய்மர் இரண்டரை ஆண்டுகளை காயத்தில் மட்டுமே வீணடித்து விட்டார். அவ ருக்கு கணுக்கால் காயம் மிகப்பெரும் பிரச்சனையாக உள்ளது. உல கக்கோப்பை மற்றும் முக்கியமான கிளப் லீக் உள்ளிட்ட முக்கிய தொடர் களில் மட்டுமே அவர் விளையாடி வருகிறார். கண்ணீர் குறிப்பாக கடந்த 6 மாத காலமாக தொடர் ஓய்வில் இருந்த நெய்மர் தற்போது “பிரேசிலிய சீரிஸ் ஏ” கால்பந்து தொடரில் சான்டோஸ் அணிக்காக களமிறங்கினார். ஞாயிறன்று நடைபெற்ற ஆட்டத்தில் வாஸ்கோடாகாமா அணியிடம் சான்டோஸ் 0-6 என்ற கணக்கில் படு தோல்வியடைந்தது. இது நெய்மரின் தொழில்முறை கால்பந்து வாழ்க்கை யில் மிகப்பெரிய தோல்வியாகும். காயம் காரணமாக பார்மை இழந்து தவித்துவரும் நெய்மர், சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டியில் பார்மை மீட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார் என பிரேசில் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நெய்மர் விளையாடியும் சான்டோஸ் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் தோல்வி யடைந்ததால், எதிர்பார்ப்புடன் வந்த ரசிகர்கள் பலர் பாதியிலேயே மைதானத்தை விட்டு வெளியேறினர். இந்நிலையில் படுதோல்வி யடைந்ததால் மைதானத்திலேயே அமர்ந்து நெய்மர் கதறி அழுதார். அவரை சகவீரர்களும், பயிற்சியாள ரும் சமாதானம் செய்தபோதும் டக்அவுட்டுக்கு செல்லும் வழியில் அழுதபடியே வெளியேறினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இத்தொடர் முழுக்க மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சான்டோஸ் அணி இதுவரை 19 ஆட்டங்களில் 10 தோல்விகளை சந்தித்து பட்டியலில் 15ஆவது இடத்தில் நீடிக்கிறது. கால்பந்து உல கின் முக்கிய நட்சத்திர வீரர் ஒருவர் விளையாடும் அணி இவ்வளவு மோச மான இடத்தில் இருப்பது சோகமான விஷயம் தான். இந்த சூழலில் அணியின் தோல்விக்காக சான்டோஸ் அணியின் பயிற்சியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். வேகமாக ஓட முடியவில்லை கால்பந்து களத்தில் நெய்மரால் முன்பு போல் ஓட முடியவில்லை. இது காயம் அல்லது மன அழுத்தமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அதே போல உடல்நிலையும் ஒரு காரண மாக இருக்கலாம் என சான்டோஸ் அணி யின் வட்டாரங்கள் கூறி வருகின்றன. கால்பந்து விளையாட்டில் நெய்மரின் சகாப்தம் விடைபெறும் நிலையில் இருப்பதாகவும் பிரேசில் ஊடகங்கள் சர்ச்சைக்குரிய வகையில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
உலகக்கோப்பை நடத்தும் வாய்ப்பை இழந்தது பெங்களூரு சின்னசாமி மைதானம்
13ஆவது சீசன் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்குகிறது. இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் கூட்டாக நடைபெறும் இந்த உலகக்கோப்பையின் தொடக்க மற்றும் இறுதி ஆட்டம் என 5 போட்டிகள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் என போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜூன் மாதம் ஐபிஎல் ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றி கொண்டாட்ட கூட்ட நெரிசல் பிரச்சனையால் போட்டிகளை நடத்துவதற்குத் தேவையான அனுமதிகளைப் பெற முடியவில்லை என கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி), பிசிசிஐயுடன் கலந்தாலோசித்து, மாற்று இடத்தை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.