games

img

விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஸ்வியாடெக் - ரூத் ஜோடி சாம்பியன்

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான அமெரிக்க ஓபன் தொடர் ஆகஸ்ட் 24ஆம் தேதி நியூயார்க் நகரில் தொடங்க உள்ளது. இந்த தொடரில் வழக்கத்துக்கு மாறாக தகுதிச் சுற்றுடன் கலப்பு இரட்டையர் ஆட்டங்களும்  முன்கூட்டியே தொடங்கின. பொதுவாக கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் தொடங்கி 2ஆவது, 3ஆவது சுற்று நடைபெறும் போதுதான் கலப்பு இரட்டையர் பிரிவு சுற்று ஆட்டங்கள் தாமதமாக தொடங்கும். ஆனால் இந்த முறை அமெரிக்க ஓபனில் மட்டும் முன்னதாகவே கலப்பு இரட்டையர் ஆட்டங்கள் தொடங்கி விட்டன. இந்நிலையில், இந்திய நேரப்படி வியாழக்கிழமை அன்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் போலந்தின் ஸ்வியாடெக் - நார்வேயின் ரூத்  ஜோடி, இத்தாலியின் சாரா - ஆந்திரே ஜோடியை எதிர்கொண்டன. தொடக்கம் முதலே பரபரப்பாக நடை பெற்ற இந்த ஆட்டத்தில் 6-3, 5-7, 10-5 என்ற செட் கணக்கில் ஸ்வியாடெக் - ரூத் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது

மகளிர் ஆசியக் கோப்பை ஹாக்கி : இந்திய அணி அறிவிப்பு

11ஆவது சீசன் மகளிர் ஆசி யக் கோப்பை ஹாக்கி சீனாவின் ஹாங்சோ நகரில் செப்டம்பர் 5 முதல் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி பெல்ஜியம் மற்றும்  நெதர்லாந்தில் அடுத்தாண்டு  (2026)  நடைபெற உள்ள மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கு நேரடி தகுதி பெறும். இதனால் சீனாவில் நடை பெறும் ஆசியக் கோப்பை ஹாக்கி தொடர் மிக முக்கியமானது என்ற நிலை யில், இந்த தொடருக்கான இந்திய அணி வியாழக்கிழமை அன்று அறிவிக்கப்பட்டது. கேப்டன் : சாலிமா தேத்தே கோல் கீப்பர்கள் : பன்சாரி சோலங்கி, பிச்சு தேவி கரிபாம் பின்களம் : மனிஷா சௌகான், உதிதா,  ஜோதி, சுமன் தேவி தௌதம், நிக்கி பிரதான், இஷிகா சௌத்ரி நடுகளம் : நேஹா, வைஷ்ணவி வித்தால் பால்கே, சாலிமா தேத்தே, ஷர்மிளா தேவி, லல்ரெம்சியாமி, சுனேலிதா டோப்போ முன்களம்  : நவ்னீத் கவுர், ருதாஜா தாடாசோ பிசல், பியூட்டி துங்டுங்,  மும்தாஸ் கான், தீபிகா, சங்கீதாகுமாரி. இந்திய அணியின் லீக் ஆட்டங்கள் செப்டம்பர் 5 : இந்தியா - தாய்லாந்து (மதியம் 12:00 மணி)  செப்டம்பர் 6 : ஜப்பான் - இந்தியா (மாலை 4:30 மணி) செப்டம்பர் 8 : இந்தியா - சிங்கப்பூர் (மதியம் 12:00 மணி)

இந்திய அணியின் ஒருநாள் கேப்டனாக ஸ்ரேயாஸ்?

ஆசியக் கோப்பை டி-20 தொடரின் இந்திய வீரர்கள் அறிவிப்பில் சூப்பர் பார்மில் உள்ள முன்னணி வீரரும், கேப்டன் அந்தஸ்தில் உள்ள வீரருமான ஸ்ரேயஸ் ஐயர் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது ஒருநாள் கேப்டனாக உள்ள ரோகித் சர்மாவுக்குப் பதிலாக இந்தியாவின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸை நியமிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதே போல ஆசியக்கோப்பை டி-20 தொடருக்குப் பிறகு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் ஒருநாள் இடங்கள் குறித்தும் தேர்வுக் குழு ஆலோசனை செய்ய உள்ளதாகவும் கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது.

 

.