புடாபெஸ்ட்
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் யூரோ கோப்பை கால்பந்து தொடரில் தற்போது குரூப் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குரூப் எப் பிரிவில் இடம்பெற்றுள்ள நடப்பு சாம்பியன் போர்ச்சுக்கல் ஹங்கேரி அணியை எதிர்கொண்டது.
தொடக்கம் முதல் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் போர்ச்சுக்கல் அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. கால்பந்து உலகின் முதல் நிலை வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல்களும், ராப்ஹெல் ஒரு கோலடித்து வெற்றிக்கு உதவினர்.
இந்த ஆட்டத்தில் சுவாரஸ்யமயான விஷயம் என்னவென்றால் இரு அணிகளும் 83 நிமிடம் வரை கோலடிக்க முடியாமல் திணறினர். கடைசி 10 நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணி 3 அடித்து அசத்தல் வெற்றியை ருசித்துள்ளது.