games

img

விளையாட்டு

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தில்லியில் இன்று தொடக்கம்

வியாழனன்று நடைபெற்ற தொடக்க விழா...

மாற்றுத்திறனாளிகளுக்கான 12ஆவது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி தில்லி நேரு மைதானத்தில் சனிக்கிழமை அன்று தொடங்குகிறது. அக்., 5ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில், உலகம் முழுவதும் இருந்து 104 நாடுகளைச் சேர்ந்த 2,200 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 
இந்த விளையாட்டு நிகழ்வை முன்னிட்டு வியாழக்கிழமை கண்கவர் கலைநிகழ்ச்சியுடன் தொடக்க விழா நடந்தது. இந்நிகழ்வில் இந்திய அணி
யினர் தரம்பிர், பிரீத்தி பால் தலைமை யில் அணிவகுத்து சென்றனர்.

ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராக சங்கக்கரா

ஐபிஎல் தொடரின் முதல் சாம்பியன் அணியான ராஜஸ்தான் ராயல்ஸின் தலைமை பயிற்சியாளராக இருந்த இந்திய முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் அந்த பொறுப்பில் இருந்து விலகினார். காயம் காரணமாக பொறுப்பில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், டிராவிட்டுக்கு பதிலாக புதிய தலைமை பயிற்சியாளராக இலங்கை முன்னாள் கேப்டன் சங்கக்கரா நியமிக்கப்பட உள்ளார். சங்கக்கரா ஏற்கனவே 2021 முதல் 2024ஆம் ஆண்டு வரை ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராக பணியாற்றினார். அதன்பிறகு அந்த அணியின் இயக்குநனராக செயல்பட்ட அவர், எதிர்வரும் சீசனில் (2026) இருந்து மீண்டும் பயிற்சியாளராக செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓய்வு அறிவித்தார் செர்ஜியோ புஸ்கெட்ஸ்

கால்பந்து உலகின் சிறந்த நடுகள வீரர்களில் ஒருவ ரான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த  செர்ஜியோ புஸ்கெட்ஸ் (37) கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறு வதாக அறிவித்துள்ளார். இதுதொடர் பான அறிவிப்பில் எம்எல்எஸ் (மேஜர்ஸ் லீக் - அமெரிக்கா) சீசனுடன் தனது கால்பந்து பயணத்தை முடித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். செர்ஜியோ புஸ்கெட்ஸ் 2009 முதல் 2022 வரை ஸ்பெயின் நாட்டின் தேசிய அணிக்காக விளையாடினார். தேசிய அணிக்காக 143 போட்டிகளில் விளையாடியுள்ள செர்ஜியோ, 2010 உலகக்கோப்பை மற்றும் 2012 ஐரோப்பியக் கோப்பை என 2 முக்கிய கோப்பைகளை ஸ்பெயின் அணி கைப்பற்ற முக்கிய பங்காற்றினார். அதே போல 2008 முதல் 2023 வரை பார்சிலோனா கிளப் அணிக்காகவும் பல்வேறு கோப்பைகளை கைப்பற்ற உதவினார். 2023ஆம் ஆண்டு முதல் மெஸ்ஸி விளையாடும் இன்டர் மியாமி (எம்எல்எஸ் தொடர்) அணியில் இடம்பிடித்து, தற்போது வரை அந்த அணியில் விளையாடி வருகிறார். எம்எல்எஸ் தொடர் விரைவில் நிறைவு பெற உள்ள நிலையில், இந்த தொட ரோடு கால்பந்து களத்தில் இருந்து செர்ஜியோ புஸ்கெட்ஸ் விடைபெறு கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாட்னா - பெங்கால் நேரம் : இரவு 8 மணி                   ஜெய்ப்பூர் - தமிழ் தலைவாஸ் நேரம் : இரவு 9 மணி

இடம் : எஸ்எம்எஸ் மைதானம், ஜெய்ப்பூர், ராஜஸ்தான்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஒடிடி)

ஆசியக் கோப்பை நாளை இறுதி ஆட்டம் இந்தியா - பாகிஸ்தான் இடம் : துபாய் சர்வதேச மைதானம் நேரம் : இரவு 8 மணி சேனல் : சோனி ஸ்போர்ட்ஸ், சோனி லைவ் (ஓடிடி)