games

img

மகளிர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி சிலி (சாண்டியாகோ) - 2025

மகளிர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி  சிலி (சாண்டியாகோ) - 2025

அரையிறுதியில் சீனா 

மகளிர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி தொடரின், 11ஆவது சீசன் தென் அமெரிக்க நாடான சிலியின் தலைநகர் சாண்டியாகோவில் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 1 முதல் 13ஆம் தேதி வரை  நடைபெறும் இந்த தொடரில் இந்தியா மற்றும் போட்டியை நடத்தும் சிலி உட்பட 24 நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில், காலிறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் - அமெரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அபார வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் சீனா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இரு அணி களின் வீராங்கனைகள் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதால் ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பாக நடைபெற்றது. இறுதியில் சீனா 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஜெர்மனி - அர்ஜெண்டினா அணிகளுக்கு இடையேயான காலிறுதி ஆட்டத்தில்,  2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி அர்ஜெண்டினா அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

ப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் கார்ல்சனை வீழ்த்தி  இந்திய வீரர் எரிகைசி அபாரம்

ப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் பைனல் 2025 போட்டி தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் ரவுண்ட் - ராபின் ஸ்டேஜின் 5ஆவது சுற்று ஆட்டத்தில் இந்திய செஸ் வீரர் அர்ஜூன் எரிகைசி, உலகின் முன்னணி வீரரான மாக்னஸ் கார்ல்சனுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் எரிகைசி அபார வெற்றி பெற்ற நிலையில், இந்த வெற்றியால் அர்ஜுன், போட்டியின் குரூப் ஸ்டேஜில் 4.5 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் உள்ளார். உஸ்பெகிஸ்தானின் நொதிர்பெக் சிந்தரோவ் 5.5 புள்ளிகளுடன் முதலிடத்திலும், லெவன் அரோனியன் (அர்மேனியா) 5 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும் உள்ளனர். அடுத்து நாக்அவுட் சுற்றுகளாக தொடரும். அர்ஜுன் காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் வின்சென்ட் கீமருடன் மோதவுள்ளார்.

வாரணாசி கிரிக்கெட் மைதானத்தில் உடுக்கை, திரிசூலம் உத்தரப்பிரதேச

மாநிலம் வாரணாசி பிரதமர் மோடியின் தொகுதியாகும். இந்த மக்களவை தொகுதியில் சர்வதேச மைதானம் கட்டப்பட்டு வருகிறது. கஞ்சாரி பகுதியில் 30 ஏக்கர் பரப்பளவில் 30,000 பேர் அமரக்கூடிய வகையில் ரூ.450 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் இந்த மைதான வடிவமைப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  மைதான தலைமை பெவிலியன் கோபுரம் சாமியார் கைகளில் இருக்கும் “உடுக்கை” வடிவில் உள்ளது. அதே போல மின்விளக்குகள் “திரிசூலம்” வடிவில் உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில அரசு உத்தரவின் பேரிலோ அல்லது மோடி அரசின் உத்தரவின் பேரிலோ இந்த மைதானம் மதம் சார்ந்த கண்ணோட்டத்தோடு கட்டப்பட்டு உள்ளதாக விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.  டிசம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்குப் பின்னர் அடுத்தாண்டில் சர்வதேச போட்டிகள் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.