games

img

விளையாட்டு...

மகளிர் டி-20உலகக்கோப்பை 2024 இன்றுடன் லீக் ஆட்டங்கள் நிறைவு

9ஆவது சீசன் உலகக்கோப்பை டி-20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், செவ்வாயன்று நடை பெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இங்கி லாந்து - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் மோதுகின்றன.  இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் மிக முக்கியமானதாகும். காரணம் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் பிரச்சனையின்றி எளிதாக அரை யிறுதிக்கு முன்னேறும். ஆனால் தோல்வி கண்டால் ரன்ரேட் அடிப்படை யில் தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்தி யத் தீவுகளின் தயவால் அரையிறுதிக்கு முன்னேறும் சூழல் உருவாகும். அதே போல மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றால் ரன்ரேட் அடிப்படை யில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளில் ஏதாவது ஒன்றை பின்னுக்குத் தள்ளி அரையிறுதி வாய்ப்பை பெறலாம். தோல்வி கண்டால் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெளியேறி விடும். அதனால் இரு அணிகளும் இந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து - மேற்கு இந்தியத் தீவுகள் ஆட்டத்துடன் மகளிர் உலகக் கோப்பை டி-20 தொடரின் லீக் ஆட்டங் கள் நிறைவு பெறுகிறது. அதன்பிறகு அக்டோபர் 17 (வியாழன்) அன்று  அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறு கின்றன.

பாபர் அசாம் திடீர் நீக்கம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் வித்தியாசமான செயலுக்கு வலுக்கும் எதிர்ப்பு

இந்திய அணியில் விராட் கோலி எப்படியோ, அதே போல பாகிஸ்தானில் பாபர் அசாம் உள்ளார். கோலியின் அளவுக்கு இல்லை என்றாலும், அவரைப் போன்று 70% அளவில் வலுவான, அதிரடியான பேட்டிங் திறனை கொண்ட பாபர் அசாம் சிறிய பார்ம் பிரச்சனையை காரணம் காட்டி அவரை அணியிலிருந்து ஓரம்கட்டியுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.  டெஸ்ட் கிரிக்கெட்டில் 2022 டிசம்பர் மாதத்திற்கு பின் பாபர் அசாம் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. இதனை காரணம் காட்டி பாகிஸ்தான் வாரியம் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு என்ற பெயரில் பாபர் அசாமை கழற்றி விட்டுள்ளது. அவருடன் ஷாஹீன் அப்ரிடி, நாசிம் ஷா ஆகியோரையும் பாகிஸ்தான் வாரியம் பெஞ்சில் அமர வைத்துள்ளது. ஒரு தேசிய அணியின் மிக முக்கியமான நட்சத்திர வீரரை காயம் இல்லாமல் ஓய்வு என்ற பெயரில் ஓரங்கட்டியது கிரிக்கெட் உலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாகிஸ்தான் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  இதுகுறித்து பாகிஸ்தான் அதிரடி பேட்டர் பகர் ஜமான் கூறுகையில்,”2019க்குப் பின் 2023 வரை 4 ஆண்டுகள் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 19.33, 28.21, 26.50 என்ற மோசமான சராசரியிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங் செய்தார். ஆனால் அவரை இந்திய அணி நிர்வாகம் நீக்கவில்லை. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது” என அவர் கூறினார்.  இதுவே முதல்முறை பொதுவாக கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் மிக முக்கியமான வீரர் ஒருவர் இருப்பார். இந்தியாவில் விராட் கோலி, ஆஸ்திரேலியாவில் ஸ்டீவன் ஸ்மித், தென் ஆப்பிரிக்காவில் மார்கிராம், இங்கிலாந்தில் ஜோ ரூட் என ஒவ்வொரு நாட்டிலும் முக்கியமான வீரர்கள் உள்ளனர். அவர்கள் எப்படி விளையாடினாலும்  அணியிலேயே தொடர்ந்து நீடிப்பார்கள் ; நீக்கம் செய்யமாட்டார்கள். அவர்கள் அணிக்கு தேவையான தூண்கள் என கல்வெட்டு கூட அடித்து வைத்து இருப்பார்கள். அதனால் அந்த வீரர்கள் சுதந்திரமாக அணியில் இருப்பார்கள். ஆனாலும் இக்கட்டான சூழலில் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றுவார்கள். இதே மாதிரியாக பாகிஸ்தான் அணியின் தூணாக இருப்பவர் பாபர் அசாம். ஆனால் கிரிக்கெட் உலகில் இதுவரை இல்லாத வகையில் ஒரு அணியின் தூணை ஓரம் கட்டி சர்ச்சைக்கு உரம் ஊட்டியுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.