உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கான ஊதிய உயர்வுவை பிசிசிஐ அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு உள்ளூர் போட்டிகளில் விளையாட முடியாமல் போன வீரர்களுக்கு 50 சதவீதம் கூடுதல் போட்டித் தொகையும், அடுத்துவரும் சீசனுக்கு ஊதிய உயர்வும் வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள டுவிட்டரில் பதிவில், கடந்த 2019-20ஆம் ஆண்டு சீசனில் உள்நாட்டுப் போட்டியில் பங்கேற்றவர்களுக்குக் கூடுதலாக 50 சதவீதம் இழப்பீடாக 2020-21ஆம் ஆண்டு சீசனில் வழங்கப்படும். வரும் சீசனுக்கும் வீரர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும். 40 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ள சீனியர் வீரர்களுக்கு 60,000 ரூபாயும், 23 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கு 25,000 ரூபாயும், 19 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கு 20,000 ரூபாயும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.