ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் முதல் சுற்றிலேயே நடையைக் கட்டிய முன்னணி நட்சத்திரங்கள்
ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டி களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 114ஆவது சீசன் ஞாயிறன்று தொடங்கியது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீராங்கனைகள் முதல் சுற்றிலேயே வெளியேறியது டென்னிஸ் உலகில் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ச்சித் தோல்விகள் : உலகத் தரவரிசையில் 11ஆவது இடத்தில் உள்ள ரஷ்யாவின் அலெக்ஸாண்ட்ராவோ, தரவரிசை யில் இல்லாத துருக்கியின் சோம்னே ஸிடம் 5-7, 6-4, 4-6 என்ற செட் கணக்கில் வீழ்ந்து தொடரில் இருந்து வெளியேறி னார். தரவரிசையில் 20ஆவது இடத்தில் உள்ள உக்ரைனின் கோஸ்டிக், தரவரிசையில் இல்லாத பிரான்சின் எல்சாவிடம் 7-6 (7-4), 6-7 (4-7), 6-7 (7-10) என்ற செட் கணக்கில் போராடி வீழ்ந்தார். அதே போல தரவரிசையில் 30ஆவது இடத்தில் உள்ள மற்றொரு உக்ரைன் வீராங்கனை டயானாவிடம், தரவரி சையில் இல்லாத ருமேனியா வீராங் கனையிடம் (எலினா) 4-6, 5-7 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து வெளியேறினார். 2ஆவது சுற்றுக்கு முன்னேறிய முன்னணி வீராங்கனைகள் : சபலென்கா (பெலாரஸ்), சுவி டோலினா (உக்ரைன்), பவோலினி (இத்தாலி)
பாபர் விவகாரத்தில் ஸ்மித்தை குறை கூற முடியாது
இந்தியாவில் ஐபிஎல் தொட ரைப் போல ஆஸ்திரேலியா வில் பிக் பாஷ் என்ற பெயரில் உள்ளூர் டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் விளையாடி வருகிறார். வாக்குவாதம் வெள்ளிக்கிழமை அன்று நடை பெற்ற லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்ஸர்ஸ் - சிட்னி தண்டர்ஸ் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய தண்டர்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை சிட்னி சிக்ஸர்ஸ் அணி துரத்திக் கொண்டிருந்த பொழுது, 11ஆவது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட பாபர் அசாம், அதனை லாங் ஆன் திசையில் (அதிக தூரம் - 2 ரன்கள் கூற ஓடலாம்) அடித்து சிங்கிள் (ஒரு ரன்) எடுக்க முயற்சித்தார். ஆனால் அப்போது நான் ஸ்டிரைக்கில் இருந்த (எதிர் பேட்டர்) ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரே லிய வீரர்), பந்து லாங் ஆன் திசைக்கு சென்ற நிலையிலும் ரன் ஓட மறுத்தார். இந்த விவகாரம் கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. களத்திலேயே ஸ்மித்திடம் பாபர் லேசான அளவில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஸ்மித் மிரட்டல் அதன்பிறகு 12ஆவது ஓவரை எதிர்கொண்ட ஸ்மித் முதல் 4 பந்து களில் 6, 6, 6, 6 என அடுத்தடுத்து 4 சிக் சர்களை பறக்கவிட்டார். அதோடு நிற்காத அவர் நோ-பாலாக போடப் பட்ட அடுத்த பந்தில் பவுண்டரி அடித்து, ஒரே ஓவரில் 32 ரன்கள் குவித்தார். கடைசி வரை மெது வாகவே விளையாடிய பாபர் அசாம் அடுத்த ஓவரில் 39 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆட்டமிழந்த கோபத்தில் பெவிலியன் செல்லும் போது பாபர் பவுண்டரி எல்லையை மட்டையால் அடித்துவிட்டுச் சென்றார். மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஸ்மித் ஸ்மித் 41 பந்தில் பிக் பேஷ் வரலாற்றில் 2ஆவது வேகமான சதத்தை அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இறுதியில் 17.2 ஓவர்களிலேயே 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து, சிட்னி சிக்ஸர்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாபர் - ஸ்மித் சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் வெற்றிக்கு ஸ்மித் அதிரடி ஒரு காரணம் என்றாலும், பாபர் - ஸ்மித் கூட்டணியின் மூலம் கிடைத்த 141 ரன்கள் பார்ட்னர்ஷிப் மிக முக்கிய காரணம் என்று கூட கூறலாம். ஆனால் கிரிக்கெட் உலகில் தலைசிறந்த பேட்ட ராக இருந்து கொண்டு, அதிரடியாக விளையாடக் கூடிய டி-20 போட்டியில் மந்தமாக விளையாடியதால் தான், ஸ்மித் மாற்று திட்டம் வகுத் தார். ஆனால் திட்டத்திற்கு ஏற்றார் போல ஒரே ஓவரில் 32 பந்துகள் குவித்து பட்டையைக் கிளப்பியுள் ளார். அதாவது நான் செய்தது (பாபர் அடித்த பந்திற்கு ரன் ஓடாமல் இருந்த தற்கு) சரி தான் என அடுத்த ஓவரில் அதிரடி ஆட்டம் நிரூபித்துள்ளார். இத னால் இந்த விவகாரத்தில் ஸ்மித்தை குறை சொல்ல முடியாது. போட்டி முடித்தவுடன் ஸ்டார்க், ஸ்மித் ஆகிய இருவரும் பாபரிடம் மன்னிப்பு கேட்டதாக செய்திகள் வெளியாகி யுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
