games

img

விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2ஆவது சுற்றில் கோகா கவுப்

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ் லாம் டென்னிஸ் போட்டி களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் தொடரின்  114ஆவது சீசன் மெல்போர்ன் நகரில் ஞாயிறன்று தொடங்கியது.  இந்நிலையில், திங்களன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 3ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் கோகா கவுப்,  தரவரிசையில் இல்லாத உஸ்பெகிஸ் தானின் கேமிலாவை எதிர்கொண் டார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய கவுப் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2ஆவது சுற்றுக்குத் தகுதி பெற்றார். 2ஆவது சுற்றுக்கு முன்னேறிய முன்னணி வீராங்கனைகள் அனிஸ்மோவா (அமெரிக்கா), முச்சோவா (செக்குடியரசு), கிளாரா டவுசன் (டென்மார்க்), பெகுலா (அமெரிக்கா). சோபியா கெனின் அவுட் தரவரிசையில் 27ஆவது இடத்தில் உள்ள முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் சோபியா கெனின், தரவரிசையில் இல்லாத மற்றொரு அமெரிக்க வீராங்கனையான ஸ்ட்ரீன்ஸை எதிர்கொண்டார். யாரும் எதிர்பாராத வகையில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ட்ரீன்ஸ் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று, 2ஆவது சுற்றுக்கு முன்னேறி னார். அதே போல தரவரிசையில் 14ஆவது இடத்தில் உள்ள அமெரிக்கா வின் நவர்ரோ 6-3, 3-6, 3-6 என்ற செட் கணக்கில் தரவரிசையில் இல்லாத போலந்து நாட்டின் லினிட்டேவிடம் வீழ்ந்து, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து வெளியேறினார்.  பெலிக்ஸ் விலகல் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 7ஆவது இடத்தில் உள்ள கனடாவின் பெலிக்ஸ், தர வரிசையில் இல்லாத போர்ச்சுக்கலின் போர்ஜஸை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் 6-3, 4-6, 4-6 என்ற செட் கணக்கில் போர்ஜஸ் முன்னிலையில் இருந்த போது, பெலிக்ஸ் காயம் காரணமாக விலகினார். இதன்மூலம் போர்ஜஸ் அதிர்ஷ்ட வாய்ப்புடன் 2ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றார். சிலிச் கலக்கல் மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் இல்லாத முன்னாள் கிராண்ட்ஸ்லாம் சாம்பி யனான குரோஷியாவின் மரீன் சிலிச் (2014 - அமெரிக்கா), தரவரிசையில் இல்லாத ஜெர்மனியின் ஆல்ட்மயரை 6-0, 6-0, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் அதிரடியாக வீழ்த்தி 2ஆவது சுற்றுக்கு முன்னேறினார். 2ஆவது சுற்றுக்கு முன்னேறிய முன்னணி வீரர்கள் : டி மினார் (ஆஸ்திரேலியா), டேவிடோவிச் (ஸ்பெயின்), ரப்லவ் (ரஷ்யா), டி பவுல் (அமெரிக்கா), மெத்வதேவ் (ரஷ்யா),வாவ்ரிங்கா (சுவிட்சர்லந்து)

தேசிய ஆடவர் இளையோர் கபடி போட்டி சாய் அணி சாம்பியன்

ஆந்திரா மாநிலம் விஜய வாடாவில் நடைபெற்று வந்த 51ஆவது தேசிய ஆடவர் இளை யோர் கபடி போட்டியின் இறுதி ஆட்டத்தில் சாய் (இந்திய விளை யாட்டு மேம்பாட்டு ஆணையம்) -  உத்தரப்பிரதேசம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 42-26 என்ற புள்ளிக்கணக்கில் சாய் அணி வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றது.  இறுதிப் போட்டியில் வீழ்ந்த உத்தரப் பிரதேசம் அணி வெள்ளிப்பதக்கமும், அரையிறுதியில் தோல்வி கண்ட கோவா மற்றும் ஹரியானா அணிகள் வெண்கலப்பதக்கங்களை வென்றன. அதிகம் எதிர்ப்பார்த்த தமிழ்நாடு அணி  தனது காலிறுதி ஆட்டத்தில் கோவா அணியிடம் வீழ்ந்து தொடரில் இருந்து வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.