games

img

நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி – தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ் அணி  

நெதர்லாந்துக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை கைப்பற்றியது.  

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.  3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2ஆவது போட்டி நேற்று ஆம்ஸ்டெல்வின் நகரில் நடைபெற்றது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நெதர்லாந்து அணி 48.3 ஓவரில் 214 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

இந்த அணியில் அதிகபட்சமாக விக்ரம்ஜித் சிங் 46 ரன்கள், மேக்ஸ் ஓடவுத் 51 ரன்கள், ஸ்காட் எட்வர்ட்ஸ் 68 ரன்களும் எடுத்தனர்.  வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அக்கேல் ஹூசைன் 4 விக்கெட்டும், அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 45.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிங் 91 ரன்களுடனும், கார்டி 43 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். இந்த வெற்றி மூலம் ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது.  

இரு அணிகளுக்கும் இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.