சர்வதேச டி20 உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாக இங்கிலாந்து - வங்கதேச அணிகள் மோதுகின்றன.
அபுதாபியில் இங்கிலாந்து - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பைக்கான ஆட்டம் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல்முறையாகச் சர்வதேச டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணியும், வங்கதேச அணியும் இன்று மோதுகின்றன.
இங்கிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியைத் தோற்கடித்தது. வங்கதேச அணி, இலங்கை அணியிடம் தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.