games

img

விளையாட்டு

பாகிஸ்தான் ரசிகர்கள் அதிர்ச்சி ஆசியக் கோப்பையில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் நீக்கம்

பாகிஸ்தான் அணி ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 7ஆம் தேதி வரை ஷார்ஜாவில் (ஐக்கிய அரபு அமீரகம் - யுஏஇ) நடைபெற உள்ள ஆப்கானிஸ்தான், யுஏஇ அணிகளுக்கு எதிரான முத்தரப்பு தொடரில் (டி-20) விளையாட உள் ளது. தொடர்ந்து செப்டம்பர் 9 முதல் யுஏஇ-யில் டி-20 வடிவத்தில் நடை பெற உள்ள ஆசியக் கோப்பை தொட ரிலும் பாகிஸ்தான் அணி விளையாடு கிறது.  இந்த 2 தொடருக்கான பாகிஸ்தான் அணி ஞாயிறன்று அறிவிக்கப்பட்டது. இந்த அணி வீரர்கள் அறிவிப்பில் மூத்த வீரர்களும், முன்னாள் கேப்டன்களு மான பாபர் அசாம், முகமது ரிஸ்வான் நீக்கப்பட்டுள்ளனர். இது பாகிஸ்தான் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் பாபர் அசாம், ரிஸ்வான் ஆகிய இருவரும் பாகிஸ்தான் அணியின் தூண்களைப் போன்றவர்கள் ஆவர். இதனால் இருவரது நீக்கம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வீரர்கள் விபரம்

சல்மான் அலி ஆகா (கேப்டன்),  அப்ரார் அகமது, பஹீம் அஷ்ராப், பக்கர் ஜமான்,  ஹரிஸ் ரவூப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலாத், குஷ்தில் ஷா, முகமது ஹாரீஸ்  (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், முகமது வாசீம் ஜூனியர், சாஹிப்சாதா பர்ஹான், சைம் அயூப், சல்மான் மிர்சா, ஷாஹீன் ஷா அப்ரிடி, சுப்யான் முகீம்.

பலமானது தான்

ஆசியக் கோப்பையில் பாபர் அசாம், ரிஸ்வான் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சிகரமான விஷயம் தான்  என்றாலும், புதிதாக அறிவிக்கப் பட்டுள்ள அணி பலமானது தான். பக்கர் ஜமான்,  ஹரிஸ் ரவூப், ஹசன் அலி, முகமது ஹாரீஸ், ஷாஹீன் ஷா  அப்ரிடி, அப்ரார் அகமது உள்ளிட்ட மூத்த வீரர்கள் உள்ளனர். அதனால் ஆசியக் கோப்பையில் விளையாட உள்ள பாகிஸ்தான் அணி பலமானது தான். 

தைரியமான முடிவு

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் முக்கிய நட்சித்திர வீரர்களை நீக்க  வேண்டும் என்றால் அரசியல் உள்ளிட்ட பல்வேறு அழுத்தங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் பாகிஸ்தான் தேர்வுக்குழு, அந்நாட்டு கிரிக்கெட் அணியின் தூண்களைப் போன்ற பாபர் அசாம், ரிஸ்வான் நீக்கியுள்ளது மிகவும் தைரியமான முடிவு என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து கூறியுள்ளனர்.

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் : இறுதியில் சின்னர், அல்காரஸ்

100 ஆண்டு பழமையான சர்வதேச டென்னிஸ் தொடர்களில் ஒன்றான சின்சினாட்டி ஒபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் ஓஹியோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை தாண்டியுள்ள நிலையில், இந்திய நேரப்படி ஞாயிறன்று அதிகாலை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள ஸ்பெயினின் அல்காரஸ், தரவரிசையில் 3ஆவது இடத்தில் உள்ள ஜெர்மனியின் ஜுவரேவ் பலப்பரீட்சை நடத்தினர். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-4, 6-3 என்ற செட் கணக்கில்  அல்காரஸ்  அபார வெற்றிப் பெற்று இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இத்தாலியின் ஜானிக் சின்னர், தரவரிசையில் இல்லாத பிரான்சின் அட்மானே மோதினர். இந்த ஆட்டத்தில் 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று சின்னர் இறுதிக்கு முன்னேறினார். இந்த பிரிவின் அரையிறுதி ஆட்டம் செவ்வாயன்று அதிகாலை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.