மெல்போர்ன் டெஸ்ட் ஆஸ்திரேலியா 311 ரன்கள் குவிப்பு
5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய நாட்டி ற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள் ளது. பார்டர் - கவாஸ்கர் என்ற பெயரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் தொட ரின் 4ஆவது போட்டி “பாக்சிங் டே (கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நடைபெறும் கிரிக்கெட் போட்டிகள்)” என்ற பெயரில் கிரிக்கெட் உலகின் மிகப் பெரிய மைதானங்களில் ஒன்றான மெல் போர்னில் வியாழக்கிழமை அதிகாலை (இந்திய நேரப்படி) தொடங்கியது. காவஜா - கோன்ஸ்டாஸ் அசத்தல் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து முதலில் களமிறங்கி யது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான காவஜா - கோன்ஸ்டாஸ் ஜோடி இந்திய வேகப்பந்து வீச்சாளர் களின் கடுமையான தாக்குதலை திட மாக சமாளித்து நிதானமாக ரன் குவித் தது. இருவரும் அரை சதமடித்த நிலை யில், தொடக்க ஜோடியை ஜடேஜா (கோன்ஸ்டாஸ் - 60 ரன்கள்) பிரித்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே பும்ரா வேகத்தில் மற்றொரு தொடக்க வீரரான காவஜாவும் (57 ரன்கள்) ஆட்டமிழந்தார்.
ஸ்மித் - லபுஸ்சாக்னே நங்கூரம்
அதன்பிறகு களமிறங்கிய ஸ்மித் - லபுஸ்சாக்னே ஜோடி பிரிஸ்பேனைப் போல மெல்போர்னிலும் நங்கூரம் அமைத்து நிதான வேகத்தில் ரன் குவித்தது. இந்த ஜோடியை கழற்ற முடி யாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக போராடி னர். அரைசதம் அடித்து சதத்தை நெருங்கி கொண்டிருந்த லபுஸ்சாக்னே வை (72) தமிழ்நாடு வீரர் சுந்தர் பெவிலிய னுக்கு அனுப்பினார். கடந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் (0) மற்றும் மார்ஷ் (4) வந்த வேகத்தில் பும்ரா வேகத்தில் ஆட்டமிழந்தனர். எனினும் விக்கெட் சரிவை தடுக்க கடு மையாக போராடிய ஸ்மித் அரைசத மடித்து அசத்தினார். அடுத்து களமிறங் கிய அலெக்ஸ் காரே (31) சிறிது அதிரடி காட்டி ஆகாஷ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பும்ரா : 3 முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 86 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் குவித் துள்ளது. ஸ்மித் (68) - கேப்டன் கம்மின்ஸ் (8) ஆகியோர் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் அதிகப்பட்ச மாக பும்ரா 3 விக்கெட்டுகளையும், ஆகாஷ், ஜடேஜா, சுந்தர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி யுள்ளனர். வெள்ளிக்கிழமை காலை 5:30 மணி அளவில் தொடர்ந்து 2ஆவது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. (சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஒடிடி).
ஹெட் “தங்க முட்டை 0” : அதிர்ந்த மெல்போர்ன்
2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை முதல் பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி வரை இந்திய அணிக்கு முக்கிய வில்லனாக இருப்பவர் ஆஸ்தி ரேலியாவின் டிராவிஸ் ஹெட். பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் அடிலெய்டு, பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து சதமடித்து மிரட்டியவர். இத்தகைய சூழலில் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் தவறான கணிப்பால் பும்ரா பந்துவீச்சில் தங்க முட்டையுடன் ஹெட் போல்டாகி வெளியேறினார். ஹெட் டக் அவுட் ஆனதால் மைதானத்தில் குவிந்து இருந்த இந்திய ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். இதனால் மெல்போர்ன் நகரமே அதிர்ந்தது போல இருந்தது.
கோன்ஸ்டாஸ் - கோலி மோதல்
மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஆஸ்திரேலியாவின் கோன்ஸ்டாஸ் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டெஸ்ட் போட்டியைப் போல் அல்லாமல் ஒருநாள், டி-20 தொடரைப் போல அதிரடியாக விளையாடினார். இவரது அதிரடிக்கு காரணம் விராட் கோலி தான். கோலி வம்பு இழுப்பதற்கு (தோள்பட்டை மோதல்) முன்பு கோன்ஸ்டாஸ் நிதான வேகத்தில் தான் ரன் சேர்த்துக் கொண்டு இருந்தார். கோலியுடனான மோதலுக்குப் பிறகு கோன்ஸ்டாஸ் ருத்ரதாண்டவம் ஆடினார். 65 பந்துகளில் 60 ரன்கள் குவித்த கோன்ஸ்டாஸ் ஜடேஜா சூழலில் ஆட்டமிழந்தார். கோன்ஸ்டாஸிற்கு வெறும் 19 வயது தான் ஆகிறது. வளரும் வீரர்களிடம் மோதலை தூண்டுவது ஆபத்தில் முடியும் என்பதற்கு கோன்ஸ்டாஸ் - கோலி மோதல் சம்பவம் ஒரு முக்கிய எடுத்துக்காட்டு ஆகும்.