மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் அரையிறுதியில் கிடாம்பி ஸ்ரீகாந்த்
சர்வதேச பேட்மிண்டன் தொட ர்களில் மிக முக்கியமானது மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடராகும். இந்த தொடர் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடை பெற்று வருகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றை யர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரான்ஸ் நாட்டின் டோமா போபோவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கிடாம்பி ஸ்ரீகாந்த் 24-22, 17-21, 22-20 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஸ்ரீகாந்த் சனிக்கிழமை அன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பானின் யுஷி தனகாவை எதிர்கொள்கிறார். இந்திய ஜோடி அவுட் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் கிராஸ்டா - கபிலா ஜோடி, சீனாவின் ஜியாங் - வெய் ஜோடியை எதிர்கொண்டது. மிக பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 22-24, 13-21 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி தோல்வி யடைந்து வெளியேறியது.
வீரர்களின் நாட்டுக்கும் மரியாதை ரசிகர்களின் மனதை வென்ற டோட்டன்ஹாம் கால்பந்து அணி
ஐரோப்பிய கிளப் கால்பந்து அணிகளுக்கான சாம்பி யன்ஸ் லீக் தொடரின் இறுதி ஆட்டம் வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டோட்டன்ஹாம் (இங்கிலாந்து கிளப்) - மான்செஸ்டர் யுனைட்டெட் (இங்கிலாந்து கிளப்) அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரு அணி வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் தொடக்கம் முதலே மிக பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டோட்டன் ஹாம் ஹாட்ஸ்பர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கோப்பையை கைப்பற்றிய மகிழ்ச்சியில் டோட்டன்ஹாம் வீரர்கள் மது தெளிப்பு, நடனம் என பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். இந்த கொண்டாட்டத்தில் மிக முக்கிய மானது டோட்டன்ஹாம் வீரர்களின் நாட்டுக்கும் மரியாதை. அந்த அணி மரி யாதை செலுத்த அனுமதி அளித்து இருப்பது தான். டோட்டன்ஹாம் இங்கிலாந்து நாட்டு கிளப் அணியாக இருந்தாலும் அந்த அணியில் வெளிநாட்டு வீரர்கள் அதிகம் உள்ளனர். சொல்லப்போனால் கேப்டன் கூட தென் கொரியாவைச் சேர்ந்த சன் மின் தான் உள்ளார். அதே போல துணை கேப்டனாக கிறிஸ்டின் ரோமிரோ, உலகளவிலான நட்சத்திர வீரர்களான ரிச்சர்லிசன் (பிரேசில்), செர்ஜியோ (ஸ்பெயின்), விகாரியோ (இத்தாலி) என பல்வேறு வீரர்கள் விளையாடி வருகின்றனர். இத்தகைய சூழலில் கொண்டாட்டத் தின் போது வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்கள், தங்கள் நாட்டின் தேசியக் கொடிகளை இடுப்பில் கட்டிக் கோப்பையுடன் நடனம் ஆடினர். பெரும்பாலும் கிளப் அணிகள் மற்ற நாடுகளின் அடையாளத்தை வெளிப் படுத்த தடை விதிக்கும். ஆனால் டோட்டன்ஹாம் அணி நிர்வாகம் வெளிநாட்டு வீரர்கள், தங்கள் நாட்டின் தேசியக் கொடிகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளது வர வேற்கத்தக்க முடிவாக கருதப்படு கிறது. அதே வேளையில் ஒரு முக்கிய மான செயல்பாட்டிற்காக ரசிகர்களின் மனதை வென்றுள்ளது டோட்டன் ஹாம் ஹாட்ஸ்பர் அணி.
ஐபிஎல் 2025 இன்றைய ஆட்டம்
பஞ்சாப் - தில்லி
நேரம் : இரவு 7:30 மணி இடம் : சவாய் சிங் மைதானம், ஜெய்ப்பூர், ராஜஸ்தான் சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)