ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
சார்ஜாவில் இன்று இரவு நடைபெறும் 51-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை அணி இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி, 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று ஏழாவது இடத்தில் உள்ளது. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் தோற்றால் மும்பை அணி லீக் சுற்றுடன் வெளியேற வேண்டிய சூழ்நிலையிலும், அடுத்த சுற்றுக்கு முன்னேற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்றைய ஆட்டத்தில் வெல்ல வேண்டிய கட்டாயத்திலும் உள்ளது என்பதால், இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி சார்ஜா மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது.