games

img

விளையாட்டு...

இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்தம்

தமிழ்நாடு வீரர்கள் 2 பேர் சேர்ப்பு

2025-26ஆம் ஆண்டுகளுக்கான இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஒப்பந்த பட்டியலை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திங்களன்று வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஏ+ தரம் (A +) : விராட கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, ஜாஸ்பிரிட் பும்ரா (இந்த பிரிவுக்கு ஆண்டு சம்பளமாக ரூ.7 கோடி வழங்கப்படுகிறது)  ஏ தரம் (A) : கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, முகமது சிராஜ், சப்மன் கில், ரிஷப் பண்ட். (ஏ பிரிவுக்கு ஆண்டு சம்பளமாக ரூ. 5 கோடி வழங்கப்படுகிறது)  பி தரம் (B) :  ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஜெய்ஸ்வால் (இந்த பிரிவுக்கு ஆண்டு சம்பளமாக ரூ.3 கோடி வழங்கப்படுகிறது)  சி தரம் (C) :  ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ரஜாத் பட்டிதார், துருவ் ஜூரேல், சர்பராஸ் கான், நிதிஷ் குமார் ரெட்டி, இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, ஆகாஷ் தீப், வருண் சக்கரவர்த்தி, நிதிஷ் ராணா. இந்த பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர்களான வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி இடம்பெற்றுள்ளனர். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றொரு வீரரான சாய் சுதர்சன் (குஜராத் அணிக்காக அதிரடியாக விளையாடி வருகிறார்) சி பிரிவு பட்டியலில் இருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளார்.   (சி பிரிவிற்கு ஆண்டு சம்பளம் ரூ.1 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது)

சிக்கிமில் முதன்முறையாக கார் பந்தயம்

ஏப்ரல் 23 அன்று தொடங்குகிறது

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம் மாநிலம் 1975 மே 16 அன்று உருவா னது. மாநிலம் தொடங்கி 50 ஆண்டு நிறைவடைந்ததை தொடந்து, சிக்கிமில் ஆண்டு முழுவதும் கொண்டாட்டங்க ளை நடத்த அம்மாநில அரசு திட்ட மிட்டுள்ளது.  இதன் ஒரு பகுதியாக ஏப்ரல் 23 அன்று கார் பந்தயம் நடக்க உள்ளதாக சிக்கிம் மாநில அரசு அறிவித்துள்ளது. சிக்கிம் மாநிலத்தில் முதன்முறையாக நடக்கும் கார் பந்தயம் இதுவாகும். மவுண்டன் ரஷ் (Mountain Rush) - டிஎஸ்டி (TSD - நேரம், வேகம், தூரம்) முறையில் நடைபெறும் இந்த கார்பந்த யம் காங்டாக்கில் உள்ள ரிட்ஜ் பூங்காவி லிருந்து தொடங்குகிறது. இந்த கார் பந்தயம் இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் கூட்டமைப்பின் (FMSCI) மேற்பார் வையின் கீழ் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் 2025

இன்றைய ஆட்டம்

லக்னோ - தில்லி

நேரம் : இரவு 7:30 மணி இடம் : எகானா மைதானம், லக்னோ, உத்தரப்பிரதேசம் சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)