games

img

விளையாட்டு... -

ஆட்டத்திறனில் மாற்றம் செய்யாததால் மீண்டும் சோகம் மகளிர் டி-20 கோப்பையில் இந்தியா அவுட்

9ஆவது சீசன் மகளிர் டி-20  உலகக்கோப்பை தொடர்  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடை பெற்று வருகிறது. இந்த தொடரில் கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப் பட்ட இந்திய அணி லீக் சுற்றிலேயே வீழ்ந்து, அரையிறுதி வாய்ப்பை இழந்தது.  வீராங்கனைகளின் காயம் மற்றும்  பார்ம் பிரச்சனை என இந்திய அணி யின் தோல்விக்கு பல்வேறு கார ணம் கூறப்பட்டாலும், அதில் முதன்மை யான காரணமாக இருப்பது ஆட்டத் திறனில் மாற்றம் செய்யாதது மட்டுமே. தற்போதைய  காலகட்டத் தில் டெஸ்ட், ஒருநாள், டி-20 போட்டி களுக்கு ஏற்றார் போல ஆஸ்தி ரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கி லாந்து, நியூசிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள் உள்ளிட்ட அணிகள் விளை யாடி வருகின்றன. குறிப்பாக மேற் குறிப்பிட்ட நாடுகள், ஆடவர்  அணியைப் போல 3 வகை ஆட்டங் களுக்கு ஏற்ப வீராங்கனைகளை தேர்வு  செய்கிறார்கள். ஆனால் இந்திய அணியோ அப்படி கிடையாது. டெஸ்ட்,  ஒருநாள் போட்டிகளைப் போன்றே  டி-20 போட்டிகளுக்கும் வீராங்கனை களை களமிறக்கி ஒரே மாதிரியாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுதான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் ஆகும். டி-20 என்ற வார்த்தைக்கு அதிரடி  மறு பொருளாக உள்ள நிலையில், இதனை இந்திய மகளிர் அணி உணர்ந்து செயல்பட்டால் வரும் காலங்களில் கோப்பையை வெல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியா - நியூஸிலாந்து டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம் இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸி லாந்து கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடவுள்ள நிலையில், இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் புதனன்று கர்நாடக தலைநகர் பெங்களூருவில் தொடங்குகிறது. இந்தியா - நியூஸிலாந்து நேரம் : காலை 9:30 மணி இடம் : சின்னசாமி மைதானம், பெங்களூரு சேனல் : ஸ்போர்ட்ஸ் 18,   ஜியோ சினிமா (ஒடிடி)

இத்தாலி வீரர் சின்னரை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் சீனியர் வீரர்கள்

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஜானிக் சின்னர் என அழைக்கப்படும் 23 வயது இளம் இத்தாலி வீரர் ஆடவர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் உலகை மிரட்டி வருகிறார். 2024இல் நடைபெற்ற 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா போட்டிகளில் கோப்பையை கைப்பற்றி அசத்திய சின்னர், சின்சினாட்டி (அமெரிக்கா), ரோட்டர்டம் (நெதர்லாந்து), மியாமி (அமெரிக்கா), ஹாலோ (ஜெர்மனி) மற்றும் 2 நாட்களுக்கு முன் நிறைவுபெற்ற ஷாங்காய் (சீனா) ஓபன் உள்ளிட்ட ஏடிபி தொடரிலும் முன்னணி வீரரும், 20க்கும் மேற்பட்ட கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான ஜோக்கோவிச்சை வீழ்த்தி சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார்.  சின்னர் சிக்கலானவர் சின்னரின் வெற்றி நடைக்கு முடிவு கட்ட ஜோகோவிச் (செர்பியா), ஜுவரேவ் (ஜெர்மனி), மெத்வதேவ் (ரஷ்யா), தியாபோ (அமெரிக்கா), ரூத் (நார்வே) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் கடுமையாக போராடியும் அவரை  வீழ்த்த முடியாமல் திணறி வருகின்றனர். சின்னர் சர்வீஸில் ஒரே மாதிரியாக செயல்பட்டாலும், ஷாட்களில் அடிக்கடி ஆட்டத்திறனை மாற்றுவார். முதல் செட்டில் அதிரடியாக விளையாடினால், 2ஆவது மற்றும் 3ஆவது செட்டில் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகளை குவிப்பார். ஆனால் திடீரென ஆக்ரோஷமாக விளையாடுவார். அதனால் தான் சின்னரிடம் அனைத்து தர வீரர்களும் திணறி வருகின்றனர். அல்காரஸ் இருக்கிறார் டென்னிஸ் உலகை மிரட்டி வரும் மற்றொரு இளம் வீரரான ஸ்பெயினின் அல்காரஸ் (ஸ்பெயின்) சின்னரின் வெற்றிநடைக்கு முற்றுப்புள்ளி வைக்க வாய்ப்புள்ளது. அவர் மட்டுமே சின்னருக்கு நெருக்கடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.