games

img

ஐசிசியின் யு-19 உலகக் கோப்பை : இந்திய அணி அறிவிப்பு  

ஐசிசி-யின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு யாஷ் துல் தலைமையிலான இந்திய அணியை ஜூனியர் தேர்வுக் குழு இன்று தேர்வு செய்தது.  

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மேற்கிந்தியத் தீவுகளில் அடுத்தாண்டு ஜனவரி 14 முதல் பிப்ரவரி 5 வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் 48 ஆட்டங்களில் விளையாடவுள்ளன. அதனை தொடர்ந்து 4 பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்குத் தகுதி பெறும்.  இதில் இந்திய அணி 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்த முதல் ஆட்டத்தில் ஜனவரி 15 ஆம் தேதி இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. அதனைதொடர்ந்து ஜனவரி 19 ஆம் தேதி அயர்லாந்தையும், ஜனவரி 22 ஆம் தேதி உகாண்டாவையும் எதிர்கொள்கிறது.  

இதற்கான இந்திய அணியை ஜூனியர் தேர்வுக் குழு இன்று தேர்வு செய்தது.  

இந்திய அணி:  யாஷ் துல் (கேப்டன்), எஸ்கே ரஷீத் (துணை கேப்டன்), தினேஷ் பானா(விக்கெட் கீப்பர்), ஆராத்யா யாதவ்(விக்கெட் கீப்பர்), ராஜ் அன்கட் பாவா, அன்க்ரிஷ் ரகுவன்ஷி, ஹர்னூர் சிங், மனவ் பரக், கௌசல் தாம்பே, ஆர்எஸ் ஹங்கார்கேகர், நிஷாந்த் சிந்து, சித்தார்த் யாத், வசு வட்ஸ், விக்கி ஓஸ்த்வல், ரவிக்குமார், கர்வ் சங்க்வான்.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை இந்திய அணி 2000, 2008, 2012 மற்றும் 2018 ஆகிய வருடங்களில் வென்றுள்ளது. 2016 மற்றும் 2020 ஆகிய வருடங்களில் இறுதி ஆட்டம் வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.