games

img

விளையாட்டு

கட்டாய வெற்றியுடன் ரன்ரேட் சிக்கல் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பை மே.இ.தீவுகள் தகர்த்துவிட்டதா?

10ஆவது சீசன் டி-20 உலகக் கோப்பை இந்தியா - இலங்கை நாடுகளில் கூட்டாக நடை பெற்று வருகிறது. தற்போது இந்த தொடரில் சூப்பர் 8 சுற்று நடைபெற்று வரும் நிலையில், குரூப் 1-இல் (சூப்பர் 8 சுற்று) இந்தியா, தென்  ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும்  மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் உள்ளன. 4 அணிகளும் தலா ஒரு போட்டியில் விளையாடியுள் ளன. இதில் மேற்கு இந்தியத் தீவுகள் - தென் ஆப்பிரிக்கா அணிகள் வெற்றி  பெற்றுள்ள நிலையில், நடப்பு சாம்பியனான இந்தியா மற்றும் ஜிம்பாப்வே தோல்வியடைந்துள்ளன.  சூப்பர் 8 சுற்றில் அரையிறுதிக்கு முன்னேற, குரூப்பில் முதல் இரண்டு இடங்களைப்பிடிக்க வேண்டும். அப்படி என்றால் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற, அடுத்து வரும் இரண்டு போட்டிகளிலும் வெல்ல வேண்டும். மேலும் அப்போட்டிகளில் அதிக ரன்ரேட் வித்தியாசத்திலும் வெல்ல வேண்டும் என்ற அழுத்தமும் இந்திய அணியின் மீது உள்ளது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மற்ற அணிகளை சார்ந்து கட்டாய வெற்றி ஒரு பக்கம் இருக்கும் சூழலில், இந்தியா அரை யிறுதிக்கு வர மற்ற அணிகள் விளை யாடும் ஆட்டங்களின் முடிவைச் சார்ந் திருக்க வேண்டிய நிலை வரலாம். இந்தியா அடுத்த இரு போட்டிகளில் மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த இரு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று, அதே சமயம் தென் ஆப்பிரிக்காவும் அதன் இரு போட்டிகளிலும் (மொத்தம் 3 போட்டிகள்) வென்றால், இந்திய அணி 4 புள்ளிகளையும் தென் ஆப்பி ரிக்கா 6 புள்ளிகளையும் பெற்றி ருக்கும். இதன்மூலம், இந்திய அணி அரை யிறுதிக்கு எளிதில் தகுதி பெறும். ஆனால், இந்தியா ஒரு போட்டி யில் தோற்றால் உலகக்கோப்பை யிலிருந்து வெளியேறும் ஆபத்தை சந்திக்கும். அதே போல இந்தியா இரு போட்டிகளிலும் வென்று, தென்  ஆப்பிரிக்கா ஒரு போட்டியில் தோற்றால் இரு அணிகளும் 4 புள்ளிகளைப்பெற்றி ருக்கும். தென் ஆப்பிரிக்கா அடுத்த போட்டியில் தோற்றால், இந்தியாவின் அரையிறுதி வாய்ப்புகள் மேம்படும்.  குறிப்பாக, மேற்கு இந்தியத் தீவுகள் தென் ஆப்பிரிக்காவை வென்றால் அது இந்தியாவுக்கு பலன ளிக்கும். அப்படியான சூழலில், ஜிம்பா ப்வே மற்றும் தென் ஆப்பிரிக்கா போட்டி மிகவும் முக்கியமானதாகும். ஆனாலும், ஜிம்பாப்வே மேற்கு இந்தியத் தீவுகளை வீழ்த்தும் என்ற  நம்பிக்கையிலேயே இந்தியா இருக்க வேண்டிவரும். இது நிகழ்ந்தால், மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் தலா இரு புள்ளி களை பெற்றிருக்கும். இதனால், தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் நான்கு புள்ளிகளுடன் அரை யிறுதிக்கு தகுதி பெறும். ரன்ரேட் இப்படி பல்வேறு சிக்கல் முடிச்சுக் களை அவிழ்த்து இந்தியா அரை யிறுதிக்கு முன்னேற நினைத்தாலும், ரன்ரேட் என்ற இடியாப்ப சிக்கல் ஒன்று  வேறு உள்ளது. மேற்கு இந்தியத் தீவு கள் அணி 5.35 என்ற நிகர ரன் ரேட்டுடன் அந்தக் குழுவில் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் தென் ஆப்பிரிக்க அணி உள்ளது, அதன் நிகர ரன் ரேட் 3.80 ஆகும். இந்தியா -3.80 (மைனஸ்) என்ற நிகர ரன் விகிதத்துடன் மூன்றாவது இடத்திலும், ஜிம்பாப்வே -5.35  (மைனஸ்) நிகர ரன் விகிதத்துடன் கடைசி இடத்திலும் உள்ளன. இது இந்தியாவின் அரையிறுதி பாதையை மிகவும் கடினமாக்கியுள்ளது. அதாவது மேற்கு இந்தியத் தீவுகள் தன்னுடைய 5.35 ரன்ரேட்டுடன் சிக்க லை ஏற்படுத்தியுள்ளது.  இந்தியா அடுத்தடுத்து விளை யாடும் இரண்டு ஆட்டங்களில் மேற்கு  இந்தியத் தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே  ஆகிய இரண்டு அணிகளையும் வெற்றி பெறுவது மட்டும் போதாது. அதிக ரன்ரேட் உடன் வெற்றியை ருசிக்க வேண்டும். இதெல்லாம் சாதகமாக இருந்தால் மட்டுமே இந்தி யாவால் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான சூழல் உள்ளது. தென் ஆப்பிரிக்காவின் ரன்ரேட்டை (3.80) கூட தொட்டு விடலாம். மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் ரன் ரேட்டை (5.35) நெருங்கு வது சிரமம் தான்.  இத்தொடர்பாக பத்திரிகையாளர் விக்ராந்த் குப்தா கூறுகையில், “இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். தென் ஆப்பிரிக்கா மேற்கு இந்தியத் தீவுகளை வீழ்த்தினால், இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறும். ஆனால் 3 அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெல்லும் நிலை  வந்தால், இந்தியா நிகர ரன்  விகிதத்தில் (ரன்ரேட்) மிகவும்  பின்தங்கியிருக்கும். அதனால் தொடரில் இருந்து வெளியேற்றப் படும்” என்று அவர் கூறியுள்ளார்.

இன்றைய ஆட்டம்

நியூஸிலாந்து - இலங்கை நேரம்: இரவு 7:00 மணி/ இடம்: கொழும்பு, இலங்கை சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)