games

img

காபா டெஸ்ட் – இந்திய அணி தடுமாற்றம்

காபா டெஸ்டின் 3ஆவது நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 51 க்கு 4 என்ற நிலையில் முடிவுக்கு வந்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா ஸ்டேடியத்தில் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் 117.1 ஓவர்களில் 445 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 151 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனைத்தொடர்ந்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது. துவக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால், சுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, கே.எல்.ராகுல் மட்டும் ஒரு பக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதைத்தொடர்ந்து வந்த ரிஷிப் பண்டும் 9 ரன்களில் களத்தைவிட்டு வெளியேற, ஆஸ்திரேலிய அணியின் அபார பந்துவீச்சால் இந்திய அணி பேட்டிங்கில் தடுமாறியது. அடிக்கடி மழை குறுக்கிட்டதால் இன்றைய நாள் ஆட்டமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. மழை பாதிப்பு மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக இன்றைய நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.

முடிவில் இந்திய அணி 17 ஓவர்களை எதிர்கொண்டு 4 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்களை எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 33 ரன்களுடனும், கேப்டன் ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இந்திய அணி, ஆஸ்திரேலியாவை விட 394 ரன்கள் பின் தங்கியுள்ளது. பாலோ ஆன் ஆவதை தவிர்க்கவே இந்திய அணிக்கு இன்னும் 194 ரன்கள் தேவை என்ற நிலை உள்ளது. இந்நிலையில், நாளைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.