games

img

விளையாட்டு

கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறை ஒரே போட்டியில் 3 சூப்பர் ஓவர்

டெஸ்ட், ஒருநாள் போட்டி களைப் போல் அல்லாமல் டி-20 கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்தால் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். ஆனால் டி-20 போட்டிகளில் சூப்பர் ஓவர் அடிக்கடி நிகழாது. இந்நிலையில், நெதர்லாந்து - நேபாளம் அணிகள் மோதிய டி-20 போட்டியில் ஒன்றல்ல; இரண்டல்ல; மொத்தம்  மூன்று சூப்பர் ஓவர்கள் வீசப்பட்டுள்ளது. திங்களன்று நெதர் லாந்து - நேபாளம் அணிகள் மோதிய டி-20 போட்டி ஸ்காட்லாந்து நாட்டின் டிட்வுட் நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற நேபாளம் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களை எடுத்தது. 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நேபாளம் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களை எடுத்ததால், ஆட்டம் சமனில் முடிந்து, சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. முதல் சூப்பர் ஓவரில் 2 அணி களும் தலா 19 ரன்கள் எடுக்க, இரண்டா வது சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. அந்த சூப்பர் ஓவரில் இரு அணிகளும் 17 ரன்களை எடுத்தது. கடைசியாக 3ஆவது சூப்பர் ஓவருக்கு ஆட்டம் நகர்ந்தது. அதில் நேபாளம் அணி முதல் 4 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து அணி முதல் பந்திலேயே சிக்ஸ் விளாசி அபார வெற்றிபெற்றது. கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறை யாக 3 சூப்பர் ஓவர்கள் வீசப்பட்ட போட்டியாக நெதர்லாந்து - நேபாளம் போட்டி அமைந்துள்ளது. இது ஒரு சாதனை சம்பவமாகவும் பதிவாகி யுள்ளது.

பிக் பாஷ் லீக்கில் சித்தார்த் கவுல்

ஐபிஎல் தொடரைப் போன்று ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் (பிபிஎல்)  என்ற பெயரில் டி-20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 2025ஆம் ஆண்டுக்கான சீசனில் விளையாட இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சித்தார்த் கவுல் பதிவு செய்துள்ளார்.  பிபிஎல் தொடரில் வீரர்களை தேர்வு செய்யும் டிராப்ட் தளத்தில் 600க்கும் மேற்பட்ட வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.  இதில் சித்தார்த் கவுல் பெயர் இருப்பதும் உறுதியாகியுள்ளது. அதே போன்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பிபிஎல் தொடரில் விளையாட தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

டிஎன்பிஎல் இன்றைய ஆட்டம்

மதுரை - திருநெல்வேலி

நேரம் : இரவு 7:15 மணி
இடம் : வாழப்பாடி, சேலம்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)