games

img

24 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு செல்லும் ஆஸ்திரேலிய அணி  

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-0 என வென்ற ஆஸ்திரேலிய  அணி அடுத்ததாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்கிறது.

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெள்ளிக்கிழமையன்று ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை உறுதி செய்தது. இந்த போட்டிகளானது வரும் மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இந்த போட்டி ராவல்பிண்டியில் நடைபெற உள்ளது.    

24 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு செல்லும் ஆஸ்திரேலிய அணி, 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் ஆடுவதை தவிர்த்துவந்த சர்வதேச கிரிக்கெட் அணிகள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக பாகிஸ்தானுக்கு செல்ல ஆரம்பித்துள்ளன. அந்தவகையில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சென்று நீண்ட தொடரில் ஆடுகிறது.  

பிப்ரவரி 27 ஆம் தேதி பாகிஸ்தான் செல்லும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி மார்ச் 4 ஆம் தேதிமுதல் 8 வரை முதல் டெஸ்டில் விளையாடுகிறது.  2வது டெஸ்ட் போட்டி கராச்சியில் மார்ச் 12-16 ஆம் தேதிகளிலும், 3வது டெஸ்ட் போட்டி 21-25 ஆம் தேதிவரை லாகூரில் விளையாடுகிறது.

முதல் ஒருநாள் போட்டி மார்ச் 29 ஆம் தேதியும், 2வது ஒருநாள் போட்டி மார்ச் 31 ஆம் தேதியும், 3வது ஒருநாள் போட்டி ஏப்ரல் 2 ஆம் தேதியும் ராவல்பிண்டியில் நடைபெறும்.

கடைசியாக ஏப்ரல் 5 ஆம் தேதி டி20 போட்டிகளில் விளையாடிய பின் ஏப்ரல் 6 ஆம் தேதி ஆஸ்திரேலிய நாடு திரும்புகிறது.