tamilnadu

img

‘பிங்க்’ பந்து பயிற்சியில் இந்திய வீரர்கள்

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடருக்குத் தயாராகி வருகிறது.  2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் மத்தியப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரான இந்தூரில் வியாழனன்று நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கு  தயாராகும் வகையில் இந்திய கிரிக்கெட் அணி “பிங்க்” பந்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.   இந்தூர் டெஸ்ட் போட்டி பகலில் தான் நடைபெறு கிறது என்றாலும், கொல்கத்தா பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு தயாராக தற்பொழுதே “பிங்க்” பந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை மந்தமான வெளிச்சத்தில் பயிற்சி மேற்கொள்ள ஏற்பாடு செய்து தரும்படி மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்கத்தி டம் கேட்டுக்கொண்டது. அதன்பேரில் இந்திய அணியின் கோரிக்கைக்குச் சிறப்பு ஏற்பாடுகளை மத்தியப் பிரதேச கிரிக் கெட் சங்கம் செய்து தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.