அடிலெய்டு டெஸ்ட் இந்தியா 180 ; ஆஸி., நிதான ஆட்டம்
ஆஸ்திரேலியாவில் நடை பெற்று வரும் 5 போட்டி களைக் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி 2 வாரத்திற்கு முன்பு பெர்த்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமை அன்று அடிலெய்டு மைதானத்தில் பக லிரவு ஆட்டமாக (பிங்க் பந்து டெஸ்ட்) தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கியது. முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதி லடி கொடுக்கும் முனைப்பில் இந்திய அணி மீது ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர்கள் ஸ்டார்க், கம்மின்ஸ், போலந்து ஆகியோர் தங்களது மிரட்ட லான பந்துவீச்சின் மூலம் தாக்குதல் தொடுத்தனர்.
இந்த தாக்குதலில் இந்திய அணி யின் மிடில் ஆர்டர் சீட்டுக்கட்டாய் சரிந்தது. நிதிஷ் (42), கே.எல்.ராகுல் (37), சப்மன் கில் (31) ஆகியோர் மட்டுமே ஓரளவுக்கு ரன் குவித்தனர். மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலி யன் திரும்ப, இந்திய அணி முதல் இன்னிங்சில் 44.1 ஓவர்களில் 180 ரன் களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்தி ரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்டார்க் 6 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ், போலந்து ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து தனது முதல் இன்னி ங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியைப் போலவே தொடக்கத்திலேயே பும்ரா வேகத்தில் காவஜாவை (13) இழந்தது. எனினும் நாதன் மிக்ஸ்வீனி - லபுஸ்சாக்னே ஜோடி இந்திய அணியின் தாக்கு தலை சமாளித்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 33 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்து இருந்தது. மிக்ஸ்வீனி (38) - லபுஸ்சாக்னே (20) ஆகியோர் களத்தில் உள்ளனர். சனிக்கிழமை அன்று தொடர்ந்து 2ஆவது நாள் ஆட்டம் நடை பெறுகிறது.
எதிர்பார்த்ததைப் போலவே ஸ்டார்க் பதிலடி
ஜெய்ஸ்வால் தங்க முட்டை
பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியின் பொழுது இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் ஸ்டார்க்கிடம்,”உங்கள் பந்து மிக மெதுவாக வருகிறது” எனக் கூறி ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டார். அப்போது போட்டியின் தன்மை இரு அணிக்கும் சவாலாக இருந்ததால், ஜெய்ஸ்வாலின் கருத்தை ஸ்டார்க் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டு தனது வேலையை கவனித்தார்.
ஆனால் வெள்ளிக்கிழமை நடை பெறவுள்ள 2ஆவது டெஸ்ட் போட்டி யில் ஸ்டார்க்கிடம் முதல் டெஸ்ட் போட்டியைப் போன்று வம்பு இழுப்பது நல்லதல்ல ; அவர் மூர்க்கமான குணம் கொண்ட வீரர் ; பதிலடி கொடுப்பார் என தீக்கதிரில் டிசம்பர் 5 அன்று செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. இந்த செய்தியின் கணிப்பைப் போலவே ஸ்டார்க் இந்திய அணியை இரண்டா வது டெஸ்ட் போட்டியில் புரட்டி யெடுத்துவிட்டார்.
4 முக்கியமான விக்கெட்டுகள் என 6 விக்கெட் வீழ்த்திய ஸ்டார்க், முதல் டெஸ்ட் போட்டியில் தன்னை ஸ்லெட்ஜிங் செய்த ஜெய்ஸ்வாலை முதல் பந்திலேயே தங்க முட்டையுடன் வெளியேற்றினார். ஸ்டார்க்கிற்கு ஆஸ்திரேலிய ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய ரசிகர்களும் பாராட்டுத் தெரி வித்து வருகின்றனர்.
x