தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து, நேற்று(10.11.24) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 20 ஓவர் முடிவில்
6 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் சேர்த்தது. இதைத்தொடர்ந்து, 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியும் அடுத்தடுத்து விக்கெட்களை வெற்றிக்கு போராடியது. இறுதியில் 19 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கும் 128 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் 1 க்கு 1 என்ற கணக்கில் சமநிலை பெற்றது.